சேலம், மார்ச் 24- கண் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை மட்டுமே அளிக்கப்படும் என கண் மருத்துவ சங்கம் அறிவித் துள்ளது. இதுகுறித்து சேலம் கண் மருத்துவ சங்க தலைவர் செல்வரங்கன், செயலாளர் அருள்மொழிவர்மன் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தனியார் கண் மருத்துவமனைகளில் கண் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை மட்டுமே அளிக்கப்படும். குறிப் பாக கண்ணில் அடிபடுதல், நீர் வடிதல் உள்ளிட்ட வைகளுக்கு மட்டுமே அவசர சிகிச்சை அளிக்கப்ப டும். அதுவும், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 முதல் 7 மணி வரையி லும் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும். பிற நேரங்க ளில் கண் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவமனையி்ன் கண் மருத்துவதுறையை அணுக வேண்டும். மேலும், கண் கிளினிக்கில் சிகிச்சைக்கு உடன் வருபவர்கள் கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்து உள்ளே வரவேண்டும். இவ்வாறு தெரிவிக் கப்பட்டுள்ளது.