tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குடியரசு தின விளையாட்டு போட்டிகள்

சேலம், ஜன. 27- சேலம் வடக்கு மாநகர் வாலிபர்  சங்கம் விளையாட்டு கழகம் சார் பில் இந்திய குடியரசு தினவிழா வினை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஏற்காடு மலைஅடிவாரத்தில் உள்ள ராக்போர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடக்கு மாநகர குழு விளை யாட்டு கழகம் சார்பில் குடியரசு தினவிழாவினை முன்னிட்டு கிரிக் கெட் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மைதானத்திலேயே பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணை யர் ஆனந்தக்குமார் பங்கேற்று பேலியர்ஸ் அணியினருக்கு முதல் பரிசு தொகையுடன் வெற்றி கோப்பை வழங்கினார். மேலும், தமுஎகச மாவட்ட தலைவர் மதுர பாரதி பங்கேற்று ராயல் லெவன் அணியினருக்கு இரண்டாம் பரிசு தொகையுடன் வெற்றி கோப்பை வழங்கினார். அதேபோல், வி.சி.க மாநகர மாவட்ட பொருளாளர் ஐ.காஜிமைதீன் பங்கேற்று லோகோ சிசி அணியினருக்கு மூன் றாம் பரிசு தொகையுடன் வெற்றிகோப்பை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, வழக்க றிஞர் சங்க மாநிலக்குழு உறுப்பி னர் எம்.வெற்றிவேல் தொடர் ஆட்டநாயகன் கோப்பையை பேலியர்ஸ் அணி வீரர் காசிரா மிர்க்கு வழங்கினார். இதில், வாலிபர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் எம்.கற்பகம், மாவட்ட பொருளாளர் வி.வெங்க டேஷ், வடக்கு மாநகர செயலாளர்  ஆர்.வி.கதிர்வேல், பொருளாளர் என்.அம்ஜத்கான், நிர்வாகிகள் சசிக்குமார், நாகராஜ் மாநகரக் குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்க டேஷ், சௌந்தரராஜன், வாலிபர் சங்கம் விளையாட்டு கழக தலை வர் பி.ராஜேஷ்குமார், செயலாளர்  ஆர்.குருபிரசன்னா, பொருளாளர்  ஜி.தனசேகரன் மற்றும் விளை யாட்டு கழக உறுப்பினர்கள் ஆர்.வினய் (எ) சசி, டி.மனோகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்
அன்னூர்
இதேபோல் கோவை மாவட் டம், அன்னூர் அருகே ஒட்டர் பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் குடியரசு தின விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் இசை நாற் காலி, லெமன் ஸ்பூன், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன. இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் முகமது முசீர், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன், கிளை நிர்வாகிகள் முகமது கபீர், சத்யராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கிளை நிர்வா கிகள் தர்ஷன், ரஞ்சித் (எ) விஜி, ராஜேஷ், இந்திய மாண வர் சங்கம், அஜித், மனோகர், சேகர், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் முருகசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, நடராஜ், ஜானகி  உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு வழங்கினார். மேலும் அப்பகுதியில் படிக்கின்ற மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் கற்றுத்தரும் மனோ, கோகுல் ஆகியோருக்கு கதர் ஆடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

;