tamilnadu

தலித் சமூகத்தைச் சார்ந்தவர் மர்ம மரணம் நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது அத்துமீறி தாக்குதல்

சேலம், மே 28- சேலத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த சரவணன் என்பவர் காவல் துறையினரின் விசாரணைக்கு பின் மர்மமான முறையில் இறந்த நிலையில், அவரது மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடிய மார்க் சிஸ்ட் கட்சி தலைவர்கள், பொது மக்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செய லாளர் பி.ராமமூர்த்தி தலைமையில் காவல் ஆணையாளர் அலுவலகத் தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறி யிருப்பதாவது, சேலம் திருவாக்க வுண்டனூர் பைபாஸ் சுகுமார் காலனியில் வசிக்கும் வெள்ளித் தொழிலாளியான சரவணன் என் பவரை ஒரு புகாரின் மீதான விசார ணைக்காக கடந்த மே 21 ஆம் தேதியன்று சூரமங்கலம் காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு விசாரணை என்கிற பெயரில் அவரை காவல்துறை யினர் கடுமையாக அடித்து துன்பு றுத்தியுள்ளனர். இதில் அவர் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் காவலர்கள் அவரை விடுவித்துள்ளனர். இதன்பின் வீட் டிற்கு சென்ற சரவணன் அடுத்த நாள் மதியம் வீட்டில் படுக்கை யில் படுத்திருந்தபடியே மரணம டைந்துள்ளார் .  இதையடுத்து காவல்துறை யினர் தாக்கியதால்தான் சரவணன் உயிரிழந்தார் என்கிற சூழலில் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கடந்த மே 23 ஆம் தேதியன்று காலை திருவாக்கவுண்டனூர் பைபாஸ் அருகில் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.  

அங்கு வந்த காவல்து றையினர் சம்மந்தப்பட்ட மக்களை சமாதானப்படுத்தி நியாயம் வழங்கு வதற்கு பதிலாக பொதுமக்களை கடுமையாக தாக்கி, அவர்களை கைதும் செய்துள்ளனர். இதனையறிந்து அப்பகுதியில் வசித்து வரும் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப் பினரும்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செய லாளருமான, ஐ. ஞானசௌந்தரி  சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந் தித்து விசாரித்துள்ளார். இதனை பொறுத்துக் கொள்ளமுடியாத காவல் உதவி ஆணையர் நாகரா ஜன் மற்றும் காவல்துறையினர் ஐ.ஞானசௌந்தரியை தாக்க முயற்சித்துள்ளனர். உடன் சென்ற அவரது கணவர் இருதயசாமி யையும்  காவல்துறையினர் கண் முன் தெரியாமல் தாக்கியது மட் டுமல்லாமல் அவரை காவல் வாக னத்தில் தூக்கிப் போட்டு நெஞ்சு மற்றும் முதுகு ஆகிய பகுதியில் கடுமையாக தாக்கியுள்ளனர்.

 இத னால் நிலைகுலைந்து போன அவ ரையும்,  அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களையும் வலுக்கட் டாயமாக கைது செய்துள்ளனர்.  மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் வசதி படைத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல. மேலும், ஐ.ஞானசௌந்தரி  கட்சி யில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர், அவரது கணவர் இருதயசாமியும் கட்சி உறுப்பினராக செயல்பட்டு வருகிறார் என்று தெரிந்தும் வேண்டுமென்றே காவல்துறை யினர் அவர்களை தாக்கியுள்ளனர். ஆகவே மேற்கண்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தலித் சமூகத்தைச் சேர்ந்த சரவணன் மரணத்தின் மீது நீதி விசாரணை நடைபெற வேண்டும். சரவண னின் மரணத்தையொட்டி நடை பெற்ற போராட்டத்தில் ஐ.ஞான சௌந்தரி, அவரது கணவர் இரு தயசாமி மற்றும் பொதுமக்கள் மீது அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இச்சம்பவத்திற்கு முழு முதற்காரணமாக இருந்துள்ள சுகுமார் காலனி பகுதியை சார்ந்த திலகா மற்றும் அவரது கணவர் ரவி ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக, திலகா என்பவர் நெடுஞ்சாலை நகர் கூட்டுறவு வங்கியில் இயக் குனராக இருந்து வருகிறார். தனது செல்வாக்கை பயன்படுத்தி தப் பித்துக் கொள்ள வாய்ப்பளிக்கா மல், தாங்கள் தலையிட்டு உரிய அதிகாரத்தை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

;