tamilnadu

img

வாலிபர் சங்க தலைவரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக காவல் ஆணையாளரிடம் சிபிஎம் புகார் மனு

சேலம், செப்.3 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் மீது தாக்குதல் நடத்திய பள்ளப்பட்டி காவல் ஆய் வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார்  மனு அளிக்கப்பட்டது.  சேலம் மாநகர பகுதியில் வசித்து  வரும் முருகன் என்பவருக்கு சொந்த மான வெள்ளிப்பட்டறை கடையில் வெள்ளி திருடு போனது. இது சம் பந்தமாக புகார் கொடுப்பதற்கு முருகன் என்பவருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர கமிட்டி உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு மாநகர  செயலாளருமான ஆர்.வி.கதிர் வேல் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி யன்று பள்ளப்பட்டி காவல் நிலை யத்திற்கு சென்றுள்ளார். அப் போது காவல் ஆய்வாளரான சாலை  ராம் சக்திவேலிடம் புகார் மனு  கொடுத்து பேசிக் கொண்டிருந் துள்ளனர். அப்போது,  அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் அயூப்கான் என்பவர் காவல் ஆய்வாளரிடம் கதிர்வேலனை காட்டி இவர் வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். ஏற்கனவே, காவல் ஆய்வாளரின் பல்வேறு மோசமான நடவடிக்கைகளுக்கு எதிராக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்ததால் எரிச்சலடைந்த காவல் ஆய்வாளர் சாலைராம் சக்திவோல், வாலிபர் சங்க நிர்வாகியான  கதிர்வேலை வெளியே போகச் சொல்லி மிரட்டி யுள்ளார்.  இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் சக்திவேல், கதிர் வேலனை கடுமையாக தாக்கி யுள்ளார்.  மேலும் செல்போனை பறித்துக்கொண்டு காவல் நிலையத் திலேயே கீழே உட்கார வைத்து தாக்கியுள்ளார். இதற்கிடையே,  இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கத்தினர் ஏராளமானோர் காவல் நிலையம் முன்பு திரண்டனர்.  அப்போது அங்கு வந்த மாநகர காவல்துறை மேற்கு சரக சட்டம்-ஒழுங்கு காவல் உதவி ஆணையர் இப்பிரச்சினை குறித்து விசாரணை செய்த பின் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.  மேலும், இது சம்பந்தமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.  இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி. ராமமூர்த்தி தலைமையில் செவ்வா யன்று காவல் ஆணையாளரை சந்தித்து புகார் மனு ஒன்றினை  வழங்கினார். இதில் பாதிக்கப் பட்டவருக்கு ஆதரவாக வருப வர்களை காவல்துறை ஆய்வாளர்  தாக்குவது, எந்த ஒரு குற்றமும் செய்யாத ஒருவரை குற்றவாளி யைப் போல் அடித்து உட்கார  வைத்து செல்போனை பறித்து  கொள்வது என்பது சரியான நடவ டிக்கை அல்ல. இது சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையாகும். இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து மேற்படி ஆய்வாளர் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப் பிடத்தக்கது. எனவே தாங்கள் தலையிட்டு சம்பந்தப்பட்ட காவல்  ஆய்வாளர் சாலை ராம் சக்திவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

;