tamilnadu

இளம்பிள்ளை அருகே தறி தொழிலாளி சாலை விபத்தில் பலி வேகத்தடை அமைக்க கோரிக்கை

இளம்பிள்ளை, ஜன.9- இளம்பிள்ளை அருகே தறி தொழிலாளி சாலை விபத்தில் பலி யான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப் பகுதியில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  சேலம் மாவட்டம், இளம்பிள் ளையை அடுத்த கல்பாரப்பட்டி சேவாம்பாளையம் பகுதியை சேர்ந்த அம்மாசி என்பவரின் மகன் கந்தசாமி (58). தறி தொழிலாளி. இவர் வியாழனன்று மதியம் தனது  வீட்டிலிருந்து இருசக்கர வாக னத்தில் இளம்பிள்ளை சென்று கொண்டு இருந்தார். அப்போது மினி லாரி ஒன்று கல்பாரப்பட்டி சுடு காடு பகுதி வளைவில் திரும்பும் பொழுது எதிர்பாராத விதமாக கந்த சாமி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கந்தசாமி பலத்த காயமடைந்தார்.  இவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக  சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கந்தசாமி உயிரிழந்தார்.  இதுகுறித்து ஆட்டை யாம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மினி  லாரிஓட்டுநர் பூலாவரி ஊஞ்சக் காடு பகுதியைச் சேர்ந்த வெங்க டாசலம் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.  இந்த விபத்து குறித்து அப் பகுதி மக்கள் கூறுகையில், கல்பாரப் பட்டி சுடுகாடு  அருகே தனியார் பிளாட் நிலத்தில் சுற்றுச்சுவர் விதி முறைகளை மீறி கட்டி உள்ளனர். இதனால் வளைவு பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அடிக்கடி இவ்விடத்தில் விபத்தும், உயிரிழப்பும் ஏற்படுகிறது.  எனவே  சேலம் மாவட்ட நெடுஞ்சாலைத் துறையினர் வளைவு பகுதியில் உள்ள சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும். மேலும் இப்பகுதியில் அரசு பள்ளி, நியாய விலை கடை உள்ள நிலையில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாத வகையில்  வேகத்தடை மற்றும் அறிவிப்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

;