tamilnadu

img

ஏற்காட்டில் வாகனத் தணிக்கை தீவிரம்

ஏற்காடு, ஆக.31- சுற்றுலாத்தலமான  ஏற் காட்டில் சட்ட விரோத நடவ டிக்கைகளை  தடுத்திடும் வகையில் வாகனத் தணிக் கையை தீவிரப்படுத்தி, தனி யார் விடுதிகளை கண் காணிப்பு வளையத்திற்குள் காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர். சேலம் சேர்வராயன் மலையில் உள்ள ஏற்காடு  மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள தோட்டங்களில் விளையும் காபி சர்வ தேச அளவில் புகழ் பெற்றது. மேலும்  மிளகு,   கிராம்பு,  லவங்கப் பட்டை  மற்றும் ஆரஞ்சு,   பலாப்பழம், அத்திப்பழம்,  பட்டர் புரூட்,   ஸ்டார் புரூட்,  மலை வாழை ஆகியவையும்,   சிறுதானியங்களான வரகு,  சாமை,  தினை ஆகியவையும் ஏற்காடு சுற்று வட்டாரக் கிராமங்களில் பயிரிடப்படு கின்றன. ஏழைகளின் ஊட்டி என அழைக் கப்படும்  ஏற்காட்டில் தற்போது தென் மேற்கு பருவமழை பெய்து வருவதால் இதமான சூழல் நிலவுகிறது. விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இங்குள்ள படகு இல்லம்,  லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட்,  பகோடா காட்சி முனை, மஞ்சக்குட்டை காட்சி முனை, ரோஸ்கார்டன்,  அண்ணா பூங்கா உள்ளிட்ட இடங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.  இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து வரும் சூழலில் பல் வேறு குற்ற செயல்கள்  நடப்பதாக காவல் துறைக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர் களும் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதையடுத்து, ஏற்காட்டில் காவல்துறையினர் வாகனத் தணிக் கையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், தனியார் விடுதிகளை கண்காணிப்பு வளையத்திற்குள் காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர். இதேபோல் இரு சக்கர வாகனத்தில் வருவோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என காவல்துறையினர் வாகன ஓட்டிகளை அறிவுறுத்தி வருகின்றனர்.

;