tamilnadu

img

மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9 ஆயிரத்து 900 கனஅடியாக அதிகரித்துள்ளது.அணையின் நீர்மட்டம் 50 அடியை நெருங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த அணைகளில் இருந்து, காவிரியில் திறந்து விடப்பட்டு நீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல்லுக்கு வருகிறது.ஒகேனக்கல்லில் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 9,900 கனஅடியாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி, அங்கு பரிசல் இயக்க தடை நீடிக்கிறது.மேட்டூர் அணைக்கு வியாழனன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 9,900 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. திறப்பை காட்டிலும் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால், 120 அடி நீர்தேக்கும் அளவை கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வியாழனன்று 48.92 அடியாக உயர்ந்தது.

;