tamilnadu

img

மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம், ஆக.13- மருந்துகளுக்காக வெளிநாடுக ளுக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்யப்ப டுவது அதிகரித்துள்ளதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். தமிழகத்தில் ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கோவை ஆகிய பகுதிகளில் அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்காக மஞ் சள் மண்டிக்கு ஏலத்திற்குக் கொண்டு வருகின்றனர். இவ்வாறு விற்பனைக்கு வரும் மஞ்சளை ஏலம் எடுக்க சென்னை, பெங்களூர், ஆந் திரா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநி லங்களில் இருந்து ஏராளமான வியா பாரிகள் வருகை புரிந்து வருகின்ற னர்.  இதற்கிடையே, கடந்த சில ஆண் டுகளாக வட மாநிலங்களில் மஞ்சள் சாகுபடி அதிகரித்து வருவதால், வட மாநில வியாபாரிகள் தமிழகத் திற்கு வராமல் அந்தந்த மாநிலத்தி லேயே மஞ்சளை ஏலம் எடுத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாக சில ஆண்டுகளாக தமிழக மஞ்சள் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் இருந்து வந்தது. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுக ளுக்கு முன்பு ஒரு குவிண்டால் மஞ் சள் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால், தற்போது குவிண்டால் ரூ.6 ஆயி ரத்து 500 முதல் ரூ.7 ஆயிரத்து 500 வரை மட்டும் விலை போகிறது. இத னால் மஞ்சள் விவசாயிகள் வேதனை அடைந்து வந்தனர்.  இச்சூழலில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்திக்காக மஞ்சளின் தேவை அண்மை காலமாக அதிக ரித்துள்ளது.

இதனால், மஞ்சள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படு வதால் தமிழக மஞ்சளுக்கு வெளி நாடுகளில் வரவேற்பு அதிகரித்துள் ளது. இதன்காரணமாக, தமிழக விவ சாயிகள் மஞ்சள் சாகுபடியினை அதிகப்படுத்தியுள்ளனர்.  இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் கூறியதாவது, உணவுக்காக பயன்படும் மஞ்சளில் இருந்து மாத்திரை, மருத்துகள், வாச னைப் பொருட்கள் ஆகியவைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத னால், ஆண்டு முழுக்க மஞ்சளின் தேவை இருந்து கொண்டே இருக் கும். தற்சமயம், கொரோனா நோய்த் தொற்று பரவத்தொடங்கிய பின்பு உலகலவில் மஞ்சளின் தேவை அதி கரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு முன்பு அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடு களுக்கு சுமார்  20 சதவிகிதம் மஞ் சள் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், தற்போது அதன் தேவை 25 சதவிகிதத்திற்கும் மேலாக அதிக ரித்துள்ளது. இதன் காரணமாக தமி ழகத்தில் மஞ்சள் சாகுபடியினை விவசாயிகள் அதிகரிக்கத் தொடங் கியுள்ளன. மேலும், தற்போது பெய்து வரும் தென்மேற்குப் பருவ மழை மஞ்சள் சாகுபடிக்குக் கை கொடுத்து வருகிறது. எதிர்காலத் தில் வெளிநாடுகளில் மஞ்சள் தேவை மேலும் அதிகரிக்கும்போது சாகுபடியும் அதிகரிக்கப்படும் என கூறினர்.

;