tamilnadu

வருமானவரி வழக்கு தீர்வு குறித்த சிறப்பு கூட்டம் வருமான வரித்துறை தணிக்கையாளர்கள் பங்கேற்பு

சேலம், மார்ச் 5- வருமானவரி வழக்குகளுக்கு தீர்வு காண்பது குறித்த சிறப்பு கூட்டம் சேலம் தணிக்கையாளர்கள் சங்க அலுவ லகத்தில் வியாழனன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் வரு மான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தணிக்கையாளர்கள் பங்கேற்றனர். புதிய பட்ஜெட் தாக்கலுக்கு பின்பு வருமான வரித் துறையின் சார்பில் பதியப்பட்டுள்ள வருமானவரி வழக்கு களுக்கு தீர்வுகான வருமானவரித் துறையினரும், தணிக்கையாளர்களும் இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டனர். குறிப்பாக வருமான வரித் துறையின் சார்பில் நிலுவையிலுள்ள வழக்குகளை தீர்ப்பதற்கு எளிய வழிகளை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் விதத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு சேலம் தணிக்கையாளர் சங்கத் தலைவர் பார்கவி தலைமை தாங்கினார். இதில் சேலம் சரக  வருமான வரித்துறை ஆணையர் ஜி.ஆர்.ரெட்டி திட்டத்தை  அறிமுகப்படுத்தி உரையாற்றினார். திருச்சி சரக வரு மான வரித்துறை ஆணையர் நரேந்தர் கவுர் விளக்க உரை யாற்றினார்.  இக்கூட்டத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த  தணிக்கையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தணிக்கை யாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சங்க செயலாளர் சரண்யா நன்றி கூறினார்.

;