இளம்பிள்ளை, ஆக. 26 – இளம்பிள்ளை அருகே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட புலம்பெயர்த் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திலிருந்த தப்பியோடியதால் அப்ப குதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, வேம் படிதாளம், காக்காபாளையம், மகுடஞ் சாவடி, தப்பக்குட்டை, ஏகாபுரம், கே.கே.நகர், இடங்கணசாலை, நடுவனேரி, பெரு மாகவுண்டம்பட்டி, கல்பாரப்பட்டி உள் ளிட்ட பகுதிகளில் வட மாநிலங்களில் இருந்து ஜவுளி மற்றும் அதன் சார்பு தொழிலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். தற்சமயம் கொரோனா தொற்று பரவும் காரணத்தால் புலம்பெயர்த் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் சில தளர் வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீண் டும் தொழில் செய்வதற்காக கடந்த வாரம் 52 பேர் ஒரு தனியார் பேருந்தில் ஜவுளித் தொழில் உரிமையாளர்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை பகுதிக்கு அப்பே ருந்து வந்திருந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து 52 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டியில் ஒரு பள்ளியில் தனிமைப்படுத்திருந்தனர்.
இதன்பின்னர் 52 பேருக்கும் சளி மாதிரிப் பரிசோதனை செய்ததில் 7 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்தகவலறிந்ததும் 4 பேர் தனிமைப் படுத்தப்பட்டு தங்கியிருந்த பள்ளியின் பூட்டை உடைத்து விட்டுத் தப்பியோடி னர். இதனையடுத்து வருவாய்த்துறையி னர் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் தப்பியோடியவர் களைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இத னால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டுள்ளது.