tamilnadu

உழவர் சந்தையை மீண்டும் திறக்க விவசாயிகள் கோரிக்கை

இளம்பிள்ளை, மே 18- இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதி யில் செயல்பட்டு வந்த உழவர் சந்தையை மீண்டும் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரண மாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த உழவர்சந்தை  மூடப்பட்டு, தற்காலிகமாக பெருமாகவுண் டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  மைதானத்தில் செயல்பட்டு வந்தன. இந்நி லையில் ஊரடங்கு உத்தரவு மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருவதால் தற்காலிக சந்தை யில் நுகர்வோர்கள் காய்கறி வாங்க குறைந்த அளவில் வருகின்றனர். இதனால்  விவசாய பொருட்கள் விற்பனை இல்லாமல்  பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். மேலும், பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1-ஆம்  தேதி தொடங்க உள்ள நிலையில் பள்ளி மைதானத்தில் செயல்படும் சந்தையால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.  எனவே, தற்காலிகமாக செயல்பட்டு வரும் உழவர் சந்தையை மீண்டும் இளம் பிள்ளை சந்தப்பேட்டை பகுதிக்கே  மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.