tamilnadu

img

பொதுப்பாதையை மறித்து சுவர் எழுப்பி பணம் பறிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிஎம் மனு

சேலம், ஜூன் 30- சேலத்தில் பொதுப்பாதையை மறித்து சுவர் எழுப்பி பணம் கேட்டு மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர். சேலம் மாநகர், 16 வது கோட்டம், புதூர் கல்லாங் குத்தூர் தெருவில் பொதுமக்கள் சுமார் 40 வருடங்களாக பயன் படுத்தி வந்த பாதையை தனிநபர்கள் இருவர் மறித்து சுவர் எழுப்பியதுடன், பாதையில் இரும்பு கதவு அமைத்துள்ளனர். இதன் வழியே செல்ல பணம் கொடுத்தால்தான் அனுமதிப் போம் எனவும் அவர்கள் மிரட்டி வருகின்றனர். இதன் காரண மாக அந்த பாதையை பயன்படுத்தி வந்த அப்பகுதி மக்கள்  பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நட வடிக்கை எடுத்து பாதையை மீட்டுத்தர நடவடிக்கை எடுத்திட  வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு  மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.