tamilnadu

img

உயர் மின் அழுத்த மின்சாரம் கோரி மின் வாரிய அலுவலகம் முற்றுகை - தவிச முடிவு

சேலம், ஜன. 12- உயர் மின் அழுத்த மின்சாரம் கோரி மின் வாரிய அலுவலகத்தை முற்றுகை யிடும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறி வித்துள்ளது.   தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஓமலூர் வட்ட சிறப்புக் கூட்டம்  ஓம லூர் வெண்மணி தியாகிகள் நினைவத் தில் வட்டத்தலைவர் பி.அரியாக்கவு ண்டர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்டத்துணைத்தலைவர் பி.தங்க வேலு, வட்டச்செயலாளர் அர்த்த னாரி,  வட்டப் பொருளாளர் சுரேஷ் (எ) குமரேசன் ஆகியோர் உரையாற்றி னர்.  இதில் உயர் மின் அழுத்தம் கோரி கடந்த 3 வருடங்களாக ஓமலூர் நல்லப்பன்காடுதிட்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள்.  அதன்விளைவாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது. ஆனால், மின் மாற்றி அமைத்து, மின் இணைப்பு செய்யாமல் மின் வாரியத்தினர் இழுத் தடித்து வருகின்றனர். இதனைக் கண்டித்தும், உடனே மின்மாற்றி அமைத்து உயர்மின் அழுத்தம் வழங்கக் கோரியும் ஜன. 29ஆம் தேதியன்று கருப்பூர் மின் பகிர்மான அலுவலகம் முன் முற்றுகை போராட் டம் நடத்திடுவது என்று முடிவு செய் யப்பட்டது. இக்கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

;