சேலம், ஜூலை 22- சாலை வரியை ரத்து செய்திடக்கோரி சேலத்தில் சிஐடியு சாலைப் போக்குவரத்து சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை வரியை ரத்து செய்திட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.7 ஆயிரத்து 500 நிவா ரணம் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைத்திட வேண்டும். கொரோனா காலம் முடியும் வரை நிதி நிறுவனங்கள் கடன் தவணை வசூலிப் பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சாலைப் போக்குவரத்து சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராயன், மாவட்ட துணைச் செய லாளர் எ.கோவிந்தன்,போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளர் செந்தில்குமார், சாலைப் போக்குவரத்து சங்க நிர்வாகி வேலுமணி, ஆட்டோ சங்க நிர்வாகிகள் பாஸ்கர், சண் முகம், உரிமைக்குரல் ஓட்டுநர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராஜா, கைலாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.