சேலம், மே 5-உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் 202 ஆவது பிறந்தநாள் விழா செவ்வாயன்று சேலத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு அலுவலகமான சேலம் சிறை தியாகிகள் வளாகத்தில் உள்ள காரல் மார்க்சின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமை வகித்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.உதயகுமார், எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல், எம்.குணசேகரன், மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், சேலம் தாலுகா செயலாளர் கே.எஸ்.பழனிசாமி, கிழக்கு மாநகரச் செயலாளர் பி.ரமணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சந்திரன், பி.பாலகிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகர வடக்கு செயலாளர் என். பிரவீன்குமார் மற்றும் கார்ல் மார்க்ஸ் சிலை ஏற்பாட்டாளர் எம்.முகமது அலி, யூசுப் ஸ்டாலின், சேலம் வரலாற்று சங்கம் பொதுச்செயலாளர் பர்னபாஸ், இலா.வின்சென்ட், எழுத்தாளர் கார்த்தி டாவின்சி ஆகியோர் மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏராளாமானோர் பங்கேற்றனர்.