tamilnadu

img

நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

 சேலம், ஜூலை 24- ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர் பாதுகாப்பு  குறித்த சேலத்தில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் துவக்கி வைத்தார். மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் சேலத்தில் நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி புதனன்று நடைபெற்றது. சேலம் அஸ்தம்பட்டி ரவுண் டானா பகுதியில் தொடங்கிய இந்த பேரணியானது மாநகரின் பிரதான சாலைகள் வழியாக சென்று அரசு கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது. முன்னதாக, இந்த விழிப்புணர்வு பேரணியை சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணியில் சேலம் மாந கரின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, மண் வளம் காப் போம், மழை வளம் பெறுவோம் என்பன உள்ளிட்ட  பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு முழக்கமிட்டுச் சென்றனர்.