tamilnadu

img

மூதாதையின் கல்லறையில் அமெரிக்கா தம்பதியினர் மரியாதை

ஏற்காடு, ஜன.19- ஏற்காட்டில், 120 ஆண்டுகளுக்கு முன் இறந்த தனது முப்பாட்டன் கல்லறையில் அமெரிக்கா தம்பதியினர் மரியாதை செய்தனர்.  இந்தியாவின் ஒரே ஜமீன்தாராக இருந்தவர் ஜார்ஜ்  பிடரிக் பிஷர். இவருக்கு சொந்தமாக சேலத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்ததாகவும், ஏற்காட் டில் 136 ஏக்கர் காப்பி தோட்டம் இருந்ததாகவும் கூறப்ப டுகிறது. இவருடைய இரண்டாவது மகளான ஜெஸ்சி போல்கஸ் 1912 ஆம் ஆண்டு மரணமடைந்தார். மருமகன் தாமஸ் போல்கஸ் 1900 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவர்கள் ஏற்காடு ஹோலி ட்ரினிட்டி சர்ச் கல்லறை தோட் டத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.  இந்நிலையில், ஜெஸ்சி போல்கஸ் மகனான ஆர்தர் போல்கஸ் வழி கொல்லு பேரன் டிம் மில்லர் (78), அவரது மனைவி ஜெனட் மில்லர் (75) ஆகிய இருவரும் அமெ ரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதற்கிடையில் டிம் மில்லர் தனது முப்பாட்டன் கல்ல றையை காண, தனது மனைவியுடன் வெள்ளியன்று ஏற் காடு வந்தார். ஏற்காட்டில் இருந்த காப்பி தோட்ட நிர்வா கம், தற்போது சலேசியன் கல்லூரியிடம் இருப்பதை அறிந்து அங்கு சென்று தோட்டத்தை மில்லர் தம்பதியினர் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து சனியன்று ஹோலி டிரினிட்டி சர்ச் கல்லறையில், பெனட் வால்ட்டர், அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ மற்றும் ஓவியர் ராஜ்கார்த்திக் ஆகியோரது உதவியுடன் தாமஸ் போல்கஸ் மற்றும் ஜெஸ்சி போல்கஸ் தம்பதியினர் கல்ல றையை கண்டறிந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

;