tamilnadu

img

தவிக்கும் 108 ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள்


இளம்பிள்ளை , ஏப்.19-  இளம்பிள்ளையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் , மருத்துவர்கள் தங்க இடவசதி இல்லாததால் தவித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பிரசவம்,விபத்து மற்ற நோய்களுக்கு அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகின்றது. இதனை ஓட்டும் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு ஓய்வறை இல்லாததால் 108 ஆம்புலன்ஸ் வண்டி யினை சாலை ஓரத்தில் நிறுத்தி வருகின்றனர். இந்த வாகனம் நிறுத்த இளம்பிள்ளை காவல் உதவி மையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலோ அல்லது பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழு கட்டடத்தினையோ ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என ஒட்டுநர்கள் , அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.