tamilnadu

img

மண்டல அளவிலான துளிர் வினா-விடை போட்டி

சென்னை,நவ.30- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மண்டல அளவிலான துளிர் - ஜந்தர்மந்தர் அறிவியல் வினா-விடை போட்டி  வட சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரியில் சனிக்கிழமையன்று (நவ. 30) நடைபெற்றது. வடசென்னை மாவட்டத் தலைவர் அ.அரவிந்த் தலைமை தாங்கினார்.  மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியர் ஐ.மலை ச்செல்வி நிகழ்வை துவக்கிவைத்தார்.  மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி, துணைத் தலைவர் உதயன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் செந்தமிழ் செல்வன், தேமொழிச்செல்வி, வடசென்னை மாவட்டச் செய லாளர் காஞ்சனா, ப.கிருஷ்ணமூர்த்தி, தென் சென்னை மாவட்டச் செய லாளர் ஜெகதீஸ்வரன், இணைச் செயலாளர்கள் சித்தார்த்தன், ஆதி.ராம்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அபினாஷ் , தமிழ் இந்து நாளிதழ் மூத்த செய்தி யாளர் தேவதாசன், டாக்டர். டி.குமரன், கல்லூரி முதல்வர் அண்ணா ரஞ்ஜினி செல்லப்பா ஆகியோர் கலந்துகொண்டனர். வடசென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளுர், திருவண்ணா மலை, வேலூர்  ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 300 மாணவர்கள் பங்கேற்ற னர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி களுக்கு கேடயம்,  பதக்கம் வழங்கப்பட்டது, பங்கேற்ற அனைவருக்கும்  சான்றி தழ்கள் வழங்கப்பட்டன. முதல் இரண்டு இடத்தை பிடித்த பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டி க்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர்.