tamilnadu

கோழிப்பண்ணையை அகற்ற வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

விழுப்புரம், ஜூன் 26- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்குட்பட்டது பாக்கம் கிராமம். இங்கு சுமார்  இண்டாயிரம் பேர் வசித்து  வருகின்றனர். இக்கிரா மத்தின் நடு பகுதியில் கடந்த  சில ஆண்டுகளாக அதே  பகுதியை சேர்ந்த செல்வ குமார் என்பவர் தனக்கு  சொந்தமான கோழிப் பண்ணை இயங்கி வரு கிறார். இக்கோழிபண்ணையின் கழிவுகளால் துர்நாற்றம் வீசி வருவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கிராம  மக்கள் மற்றும் குழந்தை கள் மூச்சு திணறல் உள்ளிட்ட  இனம்புரியாத நோய்கள் தாக்கப்பட்டு அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வருகின்ற னர். இதுகுறித்து மாவட்ட  சுற்றுசூழல் மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்,  வாலிபர் சங்க நிர்வாகிகள் செஞ்சி வட்டத் தலைவர் ஜெ.வேலு தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்  தித்து புகார் மனு கொடுத்த னர்.