tamilnadu

img

களப்பணியில் வாலிபர்கள்

மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை பொறுப்பின்றி செயல்படுத்தினாலும், இந்த காலத்தில் இளைஞர்கள் பொறுப்போடு நிவாரணம் கொடுப்பது, முதியவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வது போன்ற பணிகளில் முன்னணியில் நின்றனர். ஊரடங்கின் முதல் 4 கட்டங்களில் சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு இணையாக  இளைஞர்கள் களப்பணி செய்தனர் என்றால்  மிகையல்ல. அவசர சிகிச்சைக்காக தவித்த வர்களை அழைத்து செல்கிறபோது காவல் துறையினரின் தடியடிக்கும் உள்ளாகினர். அபராதமும் செலுத்தியுள்ளனர். தனித்து விடப்பட்டவர்கள், ஆதரவற்றோர், முதியோர், துப்புரவு தொழிலாளர்கள் என வாடிய பல தரப்  பினருக்கும் உணவுகளை வழங்கி வந்தனர். இத்தகைய பணிகளில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் முன்னணியில் நின்றனர். ஊரடங்கு கால பணிகளை குறித்து வாலி பர் சங்கத்தின் வேளச்சேரி பகுதிச் செயலா ளர் திவாகர் விவரிக்கையில், “எங்களது இளை ஞர்கள் குழு 120 குடும்பங்களுக்கு தலா 1500  ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை  வழங்கியது.

களப்பணியில் இருந்த துப்புரவு  தொழிலாளர்களுக்கு 31 நாட்கள் காலை, மதி யம் என இருவேளை விதவிதமான உணவு களை சமைத்து வழங்கினோம். 13 நாட்கள் பகுதி முழுவதும் உள்ளோருக்கு உணவு பொட்  டலங்களை விநியோகித்தோம். இளம்பெண் கள் தங்கி இருந்த விடுதிகளுக்கு சென்று நாப்கின்களை கொடுத்தோம். வீடுவீடாக சென்று கணக்கெடுத்து குழந்தைகளுக்கு பிரெட், பிஸ்கெட் போன்றவற்றை விநி யோகித்தோம்.” என்றார். “நிவாரணப்பணிகளில் ஈடுபடும்போது பல நேரங்களில் காவல்துறையினர் தடை  விதித்தனர். சில இடங்களில் தாக்கவும் செய்த னர். அதனையெல்லாம் பொருட்படுத்தாமல், வேளச்சேரி காவல்நிலைய காவலர்களுக்கு முககவசம், சானிடைசர் போன்றவற்றை வழங்கினோம்” என்று கூறிய திவாகர், “தூய்மை பணியாளர்கள் வழங்க 200 ஜதை  காலணிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளோம்.

ஓரிரு நாட்களில் வந்தவுடன் அவற்றை விநி யோகிக்க உள்ளோம். கொரோனா நோயாளி களை தங்க வைக்க அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தி கொடுத்துள்ளோம்” என தங்களது சேவைகளை பட்டியலிட்டுக் கொண்டே சென்றார். ஊரடங்கின்போது ஆயிரம் ரூபாய் நிவா ரணமாக கொடுத்தது போதாது. குறைந்த பட்சம் 5 ஆயிரம் ரூபாயாவது தந்திருக்க  வேண்டும். ரேசன் கடைகளில் உணவுப் பொருட்களை இலவசமாக தருவதாக அறி வித்துவிட்டு, தரமற்றதை தருகிறார்கள். சென்னை புறநகர்ப்பகுதிகளில் திறக்கப் பட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பானம் வாங்கி வந்து அதிக விலைக்கு விற்கி றார்கள். டிரைவிங் லைசன்ஸ், ஆர்சி புத்த கத்தை போன்றவற்றை அடமானம் வைத்து குடிக்கிறார்கள். இவற்றையெல்லாம தடுக்க வேண்டும்.  வாலிபர் சங்கம் செய்தது சிறு உதவிதான். அரசு தனது பொறுப்பை உணர்ந்து  செயல்பட வேண்டும். நம்பிக்கை இழந்துள்ள  மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும் என்று  அங்குள்ள வாலிபர் சங்க நிர்வாகிகள் தெரி வித்தனர்.

;