பொன்னேரி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்ரீதேவி செவிலியர் கல்லூரி செவிலியர்கள் இணைந்து மகளிர் தின சுகாதார விழிப்புணர்வு பேரணியை சனிக்கிழமையன்று (மார்ச் 7) நடத்தினர். பொன்னேரி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து பேரணியை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி துவக்கி வைத்தார். பொன்னேரி அரசு பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் எஸ். அனுரத்னா தலைமையில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.