திருவண்ணாமலை, ஜூன் 13- திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் பாலானந்தல் மதுரா பாரதிபுரம் கிராமத் தில் கடந்த 4 மாத காலமாக குடிநீர் வழங்காமலும், தெருவிளக்குகள் எரியாத தாலும் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் காலி குடங் களுடன் திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை யில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலானந்தல் மதுரா பாரதிபுரம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்ற னர். ஊராட்சி மன்ற தலை வர் மாணிக்கவேல் பாரதி புரம் பகுதியில் உள்ள குடும்பங்களின் அடிப்படை தேவைகள் குறித்து கவனம் செலுத்தாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பல முறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தால் ஆத்திரமடைந்த பெண் கள், கிராம பொதுமக்கள், காலி குடங்களுடன் திரு வண்ணாமலை - அவலூர் பேட்டை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்நிலையில் துரிஞ்சா புரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர், உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட தையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.