சென்னை:
திரையரங்குகள் திறப்பது எப்போது என தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.
அக்.15 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது என கேள்வி எழுந்திருந்தது.திரையரங்குகளை திறந்தால் மூன்று மணி நேரம் சிறிய இடத்திற்குள் அதிக மக்கள் இருக்கும் படியான சூழல் உண்டாகும். எனவே, திரையரங்குகளை திறப்பது குறித்து மத்திய அரசும் தமிழக மருத்துவர் குழுவும் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வர் அதுகுறித்த முடிவை விரைவில் அறிப்பார் என கூறப்பட்டிருந்தது.இதற்கு தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார். திரையரங்குகள் அக்டோபர் 20 அல்லது 22 ஆம் தேதி திறக்கப்பட வாய்ப்பு என தெரிவித்திருக்கிறார்.