tamilnadu

img

ரேசன் கடைகளில் கோதுமை இலவசம்

சென்னை:
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் ஒரு கிலோ கோதுமை நவம்பர் மாதம் வரை இலவசமாக தர உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவுப் பொருள் வழங் கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் கூறியிருப்பதாவது:பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத்திட்டத்தின் கீழ் கோதுமை வழங்க உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் கோதுமையை யும் நவம்பர் வரை இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ கோதுமையை தரும்போது இலவச அரிசி அளவில் குறைத்துகொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்தம் கிலோ கோதுமையை பயனாளர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விரும்பும் அட்டைதாரர்க ளுக்கு மட்டுமே கோதுமை வழங்க வேண்டும் என்று ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் தெரிவித்துள்ளார்.

;