tamilnadu

வி.பி.சிந்தன் நினைவு சுடர்: 18 மையங்களில் வரவேற்பு

சென்னை, ஜன. 17- இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) 16ஆவது அகில இந்திய மாநாடு சென்னையில் வரும் ஜனவரி 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதையொட்டி பல மாவட்டங்களில் இருந்து தியாகிகளின் நினைவு ஜோதி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) தியாகிகள் நினைவு தினத்தில் புறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக தோழர் வி.பி.சிந்தன் நினைவு சுடர் பயணம் ஞாயிற்றுக்கிழ்மை காலை 8 மணிக்கு திருவொற்றியூர் அஜாக்ஸ் அருகில் இருந்து புறப்படுகிறது. இதற்கு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்குகிறார். ஆர்.ஜெயராமன் வரவேற்கிறார். சுடரை சிஐடியு மூத்த தலைவர் வே.மீனாட்சி சுந்தரம் வழங்க பயணக் குழு தலைவர் சி.திருவேட்டை பெற்றுக் கொள்கிறார். பயணக்குழுவில் மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், வேலூர் மாவட்டச் செயலாளர் பி.பரசுராமன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் இரா.பாரி உள்ளிட்ட தலைவர்கள் செல்கின்றனர்.

திருவொற்றியூரில் துவங்கும் பயணக்குழுவிற்கு வடசென்னை எம்.கே.பி.நகர் பேருந்து நிறுத்தம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, திருநின்றவூர், தாமைரைபாக்கம் கூட் ரோடு, திருவள்ளூர், திருத்தணி, ராணிப்பேட்டை, அரக்கோணம், வேலூர், காஞ்சிபுரம், படப்பை, தாம்பரம், கிண்டி, பல்லவன் இல்லம் ஆகிய மையங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மாநாட்டை திடலை 23ஆம் தேதி காலை சென்றடைய உள்ளது. 

;