tamilnadu

விழுப்புரம் மற்றும் கடலூர் முக்கிய செய்திகள்

திருமாவளவனை அவமதித்து கேலிசித்திரம் வரைந்தவர் கைது

விழுப்புரம், மே 18 - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திரு மாவளவனை அவமானப்ப டுத்தும் வகையில் கேலிச் சித்திரம் வரைந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் வட்  டம் டி.குமாரமங்கலம் கிரா மத்தை சேர்ந்தவர் சுரேந்தி ரன் (வயது 30). வன்னியர் சமூகத்தை சேர்ந்த இவர்,  வர்மா என்ற பெயரில் ட்விட் டர் கணக்கு தொடங்கி கேலி  சித்திரங்களை வெளியிட்டு வருகிறார். இதன்படி சில நாட்  களுக்கு முன்பு திருமாவள வனை அவமானப்படுத்தும் வகையில் கருத்துப் படம்  வரைந்து வெளியிட்டார். “அந்த கருத்துப்படம் கருத்துரிமை வரைய றைக்குள் இல்லை. எனவே,  அவற்றை நீக்க வேண்டும்”  என்று சிபிஎம் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், விசிக திரு வெண்ணைநல்லூர் ஒன்றிய பொறுப்பாளர் இளவரசு அளித்த புகாரின் பேரில், திரு வெண்ணைநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிந்து திங்  களன்று (மே 18) சுரேந்  தரை கைது செய்தனர்.

 தி.மலை: கொரோனா பாதிப்பு  154 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் சமூக தொற்றாக மாறி உள்ளதா என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஆராய்ச்சி கழகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. மத்திய ஆய்வக நுட்பனர்கள் செல்வேந்திரன், செண்பகவள்ளி தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் 10 கிராமங்களுக்கு சென்று 400 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். ரத்த மாதிரிகளை சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வக அறிக்கைக்கு பின், முடிவுகள் அறிவிக்கப்படும் என அந்த குழுவினர் தெரிவித்தனர்.

படகு ஓட்டுனர்கள் குடும்பத்துடன் உண்ணாநிலை அறிவிப்பு

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியம் பிச்சாவரம் சுற்றுலா தளத்தில் கடந்த இரண்டு மாதமாக ஊரடங்கால் படகுகள் இயங்கவில்லை. சுற்றுலா தொழில் முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது.  படகு ஓட்டும் தொழிலாளிகளுக்கு சிஐடியு சங்க தலையீட்டால் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கிடைத்தது. அதன்பிறகு அரசு நிவாரணம் எதையும் வழங்கவில்லை. எனவே படகு ஓட்டுநர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கோரி மே.25 அன்று குடும்பத்துடன் உண்ணாநிலை போராட்டம் நடத்த உள்ளனர்.

;