tamilnadu

img

ஏரியை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, ஆக. 8- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்க வாடி கொல்லக்கொட்டாய் பகுதியில் உள்ள ஏரியை   தூர்  வாரி, கரைகளை பலபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சுமார் ஆயிரம் ஏக்கர் விவ சாய நிலங்கள்,  பாசனம் பெறும் வகையில் அமைந் துள்ள, இந்த ஏரியில் உள்ள   மதகு மற்றும்  கோடிகள் சிதல மடைந்து உள்ளதால்,  இந்த ஏரியில் சேமிக்கப்படும் நீர் விரயமாக, வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.  தற்போது, செங்கம் பகுதி யில் உள்ள சில ஏரிகளை தூர்  வாரி சீரமைக்க குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. இதேநேரத்தில்  தோக்கவாடி மற்றும் செங்கம் ஏரிகளை  குடிமராமத்து பணிகள் மூலம்  தூர் வார வேண்டும் என்றும்  மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதி காரிகளிடம் பலமுறை  மனு அளித்தும், இதுவரையிலும் சீரமைக்கப்படவில்லை. மழை இல்லாத காலங்களில், ஆயக்கட்டுகாரர்கள், செய் யாற்றிலிருந்து தோக்கவாடி ஏரிகால்வாயினை சீரமைத்த னர்.  ஆனால் தற்போது பருவ  மழை தொடங்க உள்ள நிலை யில், எரிகால்வாய்கள் முட்  புதர்களாலும், பிளாஸ்டிக் கழிவுகளாலும், அடைபட் டுள்ளது. எனவே, எதிர்வரும் மழைகாலங்களில் ஏரிக்கு வரும் மழைநீரை சேமித்து வைக்கவும், தோக்கவாடி ஏரி மதகு, கால்வாய்களை சீர மைக்கவும் மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;