tamilnadu

தண்ணீர் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

சென்னை, ஜூலை 11-  சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் புறநகர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு களுக்கு தண்ணீர் வழங்குவ தற்காகவும் மற்றும் திருப்போ ரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் லாரியில் தண்ணீர் எடுத்து, மேற்கண்ட புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், மானாம்பதி அடுத்த ஆமூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக விவசாய கிணறு களில் அதிகளவில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், விவசாய நிலப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும் மற்றும் கிராமப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறுகளில் நீர்சுரப்பு குறை யும் அபாயம் ஏற்பட்டுள்ள தாகக் கூறி, விவசாய கிணற்றில் தண்ணீர் எடுக்க ஆமூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய கிணற்றில் ஆயில் மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதை கண்டித்து, கடந்த 5ஆம் தேதி லாரிகளை சிறை பிடித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து, வரு வாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், தொடர்ந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு வருவதாகக் கூறி மேற்கண்ட கிராம மக்கள், லாரிகளை சிறை பிடித்து மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்த திருப்போரூர் வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் போலீ ஸார், விவசாய கிணற்றில் தண்ணீர் உறிஞ்சுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், சிறை பிடிக்கப்பட்ட லாரிகள் மற்றும் ஆயில் மோட்டா ர்களை வருவாய்த்துறை யினர் பறிமுதல் செய்த னர். இந்த சம்பவத்தால், மானாம்பதி-திருக்கழுக்கு ன்றம் சாலையில் நான்கு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

;