வேலூர்,அக்.5- வேலூர் மாவட்டம் வாலாஜா வட்டம் வன்னிவேடு ஊராட்சியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ராணிப்பேட்டை சாராட்சியர் இளம்பகவத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். வன்னிவேடு ஊராட்சியில் மூன்று டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்நிலையில்,நான்காவதுகடையை திறக்க டாஸ்மாக் நிறுவனம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. குடியிருப்பு பகுதியான தென்றல் நகரில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று கடந்த 2 ஆம் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே,“தென்றல் நகர் பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடை திறக்க கூடாது,” என மனுவில் கூறியுள்ளனர்.மனுவை பெற்ற சார் ஆட்சியர் இளம்பகவத் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.