districts

கல் குவாரிக்கு பாதை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

விழுப்புரம், செப். 13- விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கீழ்கூத் தப்பாக்கம் கிராமத்தின் வழியாக கல் குவாரிக்கு பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்த னர். அந்த மனுவில், எங்களது கிராமம் அருகே உள்ள முருக்கம் கிராமத்தில் கல் குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு தேர்குணம் கிராமம் வழியாக லாரிகள் சென்று வரும் வகையில் ஏற்கனவே பாதை உள்ளது. ஆனால் திடீரென எங்களது கிராமம் வழியாக குவாரிக்குச் செல்லும்  வகையில் எந்தவித அனுமதியுமின்றி சிலர் சாலையை விரிவாக்கம் செய்து வருகின்றனர். மேலும் எங்கள் பகுதி யில் புதிதாக குவாரி அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். கல்குவாரி அமைக்கப்பட்டால் சுமார் 100 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். குடி யிருப்புப் பகுதிகள் வழியாக லாரிகள் இயக்கப்பட்டால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கீழ்கூத்தப்பாக்கம் சாலையை அனுமதியின்றி விரிவாக்கம் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.