tamilnadu

மூத்த பத்திரிகையாளர்கள் மோகன சுந்தரம், அமல்ராஜ் மறைவு

சென்னை, ஜூலை 2- மூத்த பத்திரிகையாளர்கள் மோகன சுந்தரம், அமல்ராஜ் ஆகியோர் பணியிலிருக்கும் போதே, உடல்நலக் குறைவால் மறைவுற்றிருக்கும் நிலையில், அவர்களின் குடும்பத்தைப் பாதுகாக்க தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு, தமிழ் நாடு பத்திரிகையாளர் சங்கம்  (TUJ) கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத் தின் தலைவர் பி.எஸ்.டி. புரு ஷோத்தமன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

‘ஜெயா தொலைக்காட்சி’ ஒளிப்பதிவாளராக கடந்த 25  ஆண்டு காலமாக பணி புரிந்து வந்த தோழர் கே. அமல்ராஜ் (49) உடல்நிலை பாதிப்பால் ராமச்சந்திரா மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவ ருக்கான சிகிச்சைக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜெயா தொலைக்காட்சி நிறு வனம் மற்றும் நண்பர்கள் உதவி செய்தனர். முதல்வர் உத்தரவின்பேரில், ராஜீவ்  காந்தி அரசு மருத்துவமனை யில், தரமான, தீவிரச் சிகிச்சை  அளிக்கப்பட்டது. எனினும் சிகி ச்சை பலனின்றி தோழர் அமல் ராஜ் உயிரிழந்தார் என்கிற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதேபோல, ஆரம்பத்தில் ‘முரசொலி’ நாளிதழிலும், கடைசியாக பாலிமர் தொலைக் காட்சியிலும் பணிபுரிந்து வந்த  மூத்த பத்திரிகையாளர் தோழர்  மோகன சுந்தரமும் (52) உடல்  நலக்குறைவால் மருத்துவ மனையில் இருந்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்கின்ற செய்தி  பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் மறைவெய் திய தோழர் அமல்ராஜ், தோழர்  மோகன சுந்தரம் ஆகியோர் குடும்பத்தாருக்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்  துக் கொள்கிறேன்.

அதிலும், தோழர் மோகன சுந்தரத்தின் இறுதி நிகழ்வை அவரது குடும்பத்தார் செய்ய  இயலாத, வறுமை சூழலில் ‘உற வுகள்’ என்கிற அறக்கட்டளை யினர் தான் செய்தனர் என்ற செய்தி, வேதனையையும், வெட்கத்தையும் ஏற்படுத்துகிறது.

மகாகவி பாரதி காலந்  தொட்டு, பத்திரிகையாளர் களின் குடும்பம் வறுமைச்சூழ லில் தான் இப்போதும் உள்  ளது என்ற அவலம் ரத்தக்கண் ணீரை வரவழைக்கின்றது.

இந்நிலையில், வறுமை யில் வாடி, உடல் நலம் குன்றி, பணிக்காலத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்ப  நிலையைக் கணக்கில் கொண்டு, அமல்ராஜ், மோகன சுந்தரம் ஆகிய இருவரும் குடும்பங்களுக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி, தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும். ஏற்கெனவே உயிரிழந்த-  குடும்ப நிதி வழங்கப்படாத, பத்தி ரிகையாளர்களின், குடும்பங்க ளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டா லின், கருணையோடு சிறப்பு கவனம் செலுத்தி நிதியுதவியை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் சார்பில், கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புருஷோத்தமன் வலியுறுத்தியுள்ளார்.

;