சைதை, கிண்டியில் குட்கா விற்பனை: 7 பேர் கைது
போரூர்,செப்.15- எம்.ஜி.ஆர். நகர், குமரன் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கிண்டி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட மாவா, புகை யிலை, குட்கா உள்ளிட்ட பொருட்கள் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெற்கு இணை ஆணையர் மகேஸ்வரிக்கு புகார் வந்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர்கள் ராஜா பாரதிதாசன், பால கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சைதாப்பேட்டை திடீர் நகர் பகுதியில் உள்ள வீட்டில் மாவா பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறை க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் ஞாயி றன்று (செப்.15) காலை அந்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் மாவா பதுக்கி வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்ப ட்டது. இது தொடர்பாக கங்கை அமரன் (40), விஜய் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களி டம் இருந்து 65 கிலோ மாவா பொருட்கள் 3 கிரைண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாவா, பான் மசாலா சப்ளை செய்து வந்த ஈக்காட்டுத்தாங்கல் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்த பாலு, தீபக், கேசவன் ஆகிய 3பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ மாவா பொருட்கள் மோட்டார் சைக்கிள் 2 கிரைண்டர்கள் ரூ.33260 ரொக்கம், 2 செல் போன்கள் ஆகியவற்றை காவல்துறை யினர் பறிமுதல் செய்தனர். போரூர் குன்றத்தூர் சாலையில் மளிகை கடை குடோனில் 4 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 75 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் கடை உரிமையாளர் சிவராஜ் மற்றும் ஊழியர் தீபக் ஆகி யோரை கைது செய்தனர்.
விஐடி மாணவர்களுக்கு ரூ. 5 லட்சம் ஊதியத்தில் வேலை
வேலூர், செப். 15- இந்தாண்டில் இதுவரை 2,200 மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான ஊதியம் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகள் பெற்றுத்தரப்பட்டுள்ளதாக விஐடி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2020ஆம் ஆண்டு பட்டமேற்படிப்பு முடிக்கும் மாணவர்க ளுக்கான வளாக வேலைவாய்ப்பு நேர்காணல் விஐடியில் கடந்த மே 1ஆம் தேதி தொடங்கியது. இதில் அமேசான், நெட் ஆப், இன்டெல், வி.எம். வேர், ஆரக்கிள், பிலிப்ஸ், கம்மின்ஸ், ரிலையன்ஸ் உள்பட இதுவரை 150 நிறுவனங்கள் வேலைவாய்ப்பு நேர்காணலை நடத்தின. இவற்றின்மூலம், எம்.டெக்., எம்சிஏ படிப்புகளில் இருந்து 788 மாணவர்க ளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையிலான மாதாந்திர உதவித்தொகை யுடன் ஆகஸ்ட் முதல் 10 மாதங்கள் வரை பணிக்கான பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். பயிற்சிக் காலத்திற்குப் பிறகு முழுநேர ஊழியராகும் இவர்களுக்கு தொடக்க ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 5 லட்சமும், அதற்கு மேலும் கிடைக்கும்.விஐடியில் இந்தாண்டு இதுவரை நடைபெற்ற வேலைவாய்ப்பு நேர்காணலில் 2,200 மாணவர்கள் சர்வதேச முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம்
வேலூர், செப். 15- குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சில்க் மில் கட்டடத்தில், உள்ள தமிழ்நாடு தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான சிறப்புப் பதிவு முகாம் நடைபெற்றது. மாவட்டத் தொழிலாளர் நல உதவி ஆணையர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜே.கே.என். பழனி, வாரிய உறுப்பினர் ஆர்.டி. பழனி ஆகியோர் முகாமைத் துவக்கி வைத்தனர். இந்த முகாமில் கட்டடத் தொழிலாளர்கள், கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள், தீப்பெட்டித் தொழிலாளர்கள், ஓட்டு நர்கள், சலவைத் தொழிலாளர்கள், தையல் தொழிலா ளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள் என 134 வகையான தொழில் செய்பவர்கள் பங்கேற்றனர். 410 பேர் புதிய உறுப்பி னர்களாக பதிவு செய்து கொண்டனர். 384 உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் கணக்கை புதுப்பித்துக் கொண்டனர். 204 தொழிலாளர்கள் கல்வி, திருமணம், பிறப்பு, இறப்பு, விபத்து குறித்து உதவி நல மனுக்கள் அளித்தனர். இதில் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள், வேலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஏ.குப்பு, சிஐடியு சங்க நிர்வாகிகள் கே.சாமிநாதன், கே.குணசேகரன், ஏ.கே.தாமோதரன், கீதா ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் பதிவு மற்றும் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அனுமதி இன்றி பேனர்: 81 வழக்குகள் பதிவு
தஞ்சாவூர், செப்.15- தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்களில் அனுமதி இன்றி ப்ளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன் கூறியதாவது, “மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி.வரதராஜூ உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் எஸ்.எஸ்.மகேஸ்வரன்(தஞ்சை), எம்.துரை (திருவாரூர்), டி.கே.ராஜசேகரன்(நாகை) ஆகியோர் மேற்பார்வையில் 3 மாவட்டங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு மொத்தம் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. இதுபோல் அனுமதி இன்றி விளம்பரப் பதாகைகள் வைப்பவர்களின் மீது, காவல்துறை மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
நடக்க இருப்பவை
‘இலங்கை முருகனும் மலேசிய முருகனும்’ நூல் வெளியீட்டு விழா - நாள்: 17.9.201, செவ்வாய் மாலை 5.30 மணி, இடம்: ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம், என்.எஸ்.சி. போஸ் சாலை, (சென்னை உயர்நீதிமன்றம் எதிரில்)- பங்கேற்பு:நீதியரசர்கள் எஸ்.ராஜேஸ்வரன், து.அரிபரந்தாமன், வழக்கறிஞர் கே.ராஜசேகரன் , எஸ்.ஏ. பெருமாள் , பிரின்ஸ் கஜேந்திரபாபு , இரா.தெ. முத்து, நூலாசிரியர் சிகரம் ச.செந்தில்நாதன்