tamilnadu

வேலூர் மற்றும் கடலூர் முக்கிய செய்திகள்

பேருந்து- லாரி மோதிய விபத்தில் பெண் பலி

வேலூர்,நவ.6- வேலூர் அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியில் சென்னை யிலிருந்து வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் அருகே, சென்னையிலிருந்து தருமபுரி செல்லும் தமிழக அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்துக்கு முன்னால், மணல் ஏற்றிச்சென்ற லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென லாரியின் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில்,  அரசு பேருந்தில் பயணித்த 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.   பேருந்தின் முன் பக்கத்தில் சிக்கிய அரசுப் பேருந்து ஓட்டுனரை, மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த, வங்க தேசத்தை சேர்ந்த அனிதா மனுஹஞ்சா(24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

மாணவர்களுக்கு புகையிலை விற்றவர் கைது

கடலூர், நவ.6- கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள பள்ளியின் அருகில் சில மாணவர்கள் ஒருவித போதை மயக்கத்தில் நின்றுக் கொண்டிருப் பதை அங்கிருந்தவர்கள் பார்த்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில்,  மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் செல்லும் வழியில் உள்ள பெட்டிக் கடையில் போதைக்கு பயன்படுத்தும் புகையிலையை வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து, வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த ரெங்கநாதன் மனைவி சாந்தி (55) என்பவரை தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததற்காக கைது செய்தனர். மேலும், மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ஆசிரியை பணியிடை நீக்கம்

கடலூர், நவ.6- கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் பு.குடி காட்டில் அரசு துவக்கப் பள்ளியின் ஆசிரியை சசிரேகா. பள்ளிக்கு வழக்க மாக தாமதமாக வருவதாக அப்பகுதியினர் புகார் தெரி விக்கின்றனர். இதுதொடர்பாக ஆசிரி யையிடம் கேட்டபோது அவர் அலட்சியமாக  பதிலளித்துள்ளார். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அண்மையில் ஆசிரியையை சந்தித்து விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது, அவர் அளித்த பதிலை செல்லிடப் பேசியில் பதிவு செய்து சமூக வலைத்தளங்க ளில் பரவ விட்டனர். அதில், ஆசிரியை சசிரேகா, இது அரசுப்பள்ளி என்பதால் எப்போது வேண்டுமானா லும் வருவேன், அதனை யாரும் கேட்க முடியாது என்ற வகையில் பதிலளித்து ள்ளார்.பணிக்கு சரியான நேரத்திற்கு வராதது, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

;