tamilnadu

img

தடுப்பூசி பற்றாக்குறை: தில்லி செல்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன்....

சென்னை:
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக் குறையை அடுத்து தில்லி செல் லும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜூலை 9 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசுகிறார்.

முன்களப்பணியாளர்களான பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் செவ்வாயன்று(ஜூலை 5) நடைபெற்றது. செய்தி மற்றும் விளம் பரத்துறை அமைச்சர்  சாமிநாதன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இணைந்து தொடங்கி வைத்தனர்.இதன்பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் இதுவரை 3,300 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் போதுமான அளவு கையிருப் பில் உள்ளது. நோய் அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவமனைக்கு வர வேண்டும்” என்றார்.

தடுப்பூசிகள் விவரத்தை தினந்தோறும் வெளிப்படையாக தெரிவித்து வருகிறோம். இதற்கு மேலும் தேவை என்றால் வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதி தருகிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.ஜூலை 21ஆம் தேதியிலிருந்து ஒட்டுமொத்த தயாரிப்பு தடுப்பூசிகளில் 75 சதவீதம் மாநிலங்களுக்கு அனுப்பப்படும் என்று இந்திய ஒன்றிய அரசு கூறியிருந் தது. தமிழகத்துக்கு கூடுதல் தடுப் பூசிகள் வேண்டும் என்று முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் நானும், மருத்துவம் மற்றும் மக் கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் இருவரும் தில்லி சென்று ஜூலை 9 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கிறோம். அப்போது கூடுதல் தடுப் பூசிகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசவிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த முகாமில் பத்திரிகையாளர்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும் பணியாளர்களும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

;