india

img

தடுப்பூசி பற்றாக்குறை... ராகுல் காந்தி  எச்சரிக்கை.....

புதுதில்லி:
போதுமான அளவு தடுப்பூசி இல்லாவிட்டால், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. மோடி அரசின் அகங்காரம், திறமையின்மையால் நோய்தொற்றால் மக்களும், பொருளாதாரமும் பாதிக்கப்படுவது தொடர்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் டுவிட்டரில் கூறுகையில் “தடுப்பூசி போதுமான அளவில் இல்லா விட்டால், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. வேலைவாய்ப்பு இல்லை, தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நிவாரண உதவி இல்லை, குறு,சிறு,நடுத்தர தொழில்களுக்கு பாதுகாப்பில்லை, நடுத்தரக் குடும்பத்தினரும் மனநிறைவுடன் இல்லை. மாம்பழம் சாப்பிடுவது சரிதான், ஆனால், குறைந்த பங்களிப்பை சாமானிய மனிதருக்கு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவி்த்துள் ளார்.

காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “கொரோனா வைரஸ் இந்தியாவின் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்க்கையிலும் தொடர்ந்து ஓர் ஆண்டாக பாதிப்பை ஏற்படுத்தி வருவது தொடர்கிறது. மோடி அரசின் அகங்காரம், திறமையின்மைக்கு அனைத்துக்கும் நன்றி.மோடி அரசின் தவறானகொள்கைகளால் சமூகத்தில்ஒவ்வொரு தளத்தில் உள்ளமக்களும் பாதிக்கப்படு கிறார்கள். கொரோனா வைரஸ் தடுத்து நிறுத்த முடியாத வேகத்தில் பரவி வருகிறது. தடுப்பூசியில் பற்றாக்குறை இருக்கிறது, விவசாயிகள், தொழிலாளர்கள் இடர்பாடு களைச் சந்தித்துள்ளார்கள்.பொருளாதாரம் சீர்குலைந்து வருகிறது, சிறுவர்த்தகங்கள் மூடப்பட்டு வருகின்றன, நடுத்தரக் குடும்பத்தினர் ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளது.
 

;