tamilnadu

img

நிலையற்ற எதிர்காலம்: கருத்துக்கணிப்பில் தகவல்

சென்னை:
இந்தியாவில் மேற் கொள்ளப்பட்டு வந்த மற்றும் புதிய திட்டங்கள் குறித்த தகவல்களைத் தொகுத்துவரும் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமான ப்ராஜக்ட்ஸ் டுடே, தேசிய அளவில் நிபுணர்களைக் கொண்டு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.  இத்திட்டங்களை மேற் கொண்டு வருபவர்கள் நடப்புச் சூழல் குறித்து என்ன நினைக்கின்றனர், அவர்களது பார்வை என்ன, ஊரடங்கு காலகட்டத்துக்குப் பிறகு எந்தெந்த திட்டங்களில் முதலீடு மேற்கொள்ளப் படும் ஆகியன குறித்து இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  

60 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் தேசிய அளவிலான ஊரடங்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முடக்கியுள்ளது. நோய்த்தொற்று எப்போது குறையும் அல்லது ஆலைகளும் அலுவலகங்களும் எப்போது மீண்டும் செயல் படத் தொடங்கும் என்பது பற்றி தீர்வு சொல்ல வழியில்லாமல் வாடிக்கையாளர் கள், அரசு, உற்பத்தியாளர் கள் என்று அனைவருமே நிலையற்று இருக்கின்றனர்.இந்தியா மட்டுமல்ல, உலகமே மிகப்பெரிய, எதிர்பாராத ஊரடங்குகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறது. அதோடு பசி, வைரஸ் தொற்று, நிலையற்ற எதிர் காலம் குறித்த பயத்தினால் பணியாற்றும் இடத்தில் இருந்து சொந்த ஊருக்கு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் சென்றதையும்  பார்க்க நேரிட்டது.

;