சென்னை,மார்ச்4- பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத் திற்காக மீண்டும் திங்களன்று தமிழகம் வருகிறார். சென்னை நந்தனம் ஒய்.எம். சி.ஏ. மைதானத்தில் அமைக்கப்பட் டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு மோடி திங்கள் மாலை உரையாற்று கிறார். இதற்காக மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டு மதியம் 1.15 மணி அளவில் அவர் சென்னை விமான நிலை யத்தை வந்தடைகிறார். விமான நிலை யத்திலிருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்து முதலில் அவர் கல்பாக்கம் சென்றடைகிறார்.
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் ரூ.400 கோடி மதிப் பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கி றார். பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கல்பாக்கத்திலி ருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்த டைகிறார். இதன் பிறகு விமான நிலையத் திலிருந்து காரில் புறப்படும் அவர் மாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலை சென்ற டைகிறார். பொதுக்கூட்டம் முடிந்த தும் இரவு சென்னை விமான நிலை யத்திலிருந்து தெலுங்கானாவுக்கு புறப்பட்டு செல்கிறார். மோடி வருகை யையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பிரதமரின் சென்னை வரு கையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள் அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதி யம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. பிரதமரின் வருகையை யொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றியுள்ள சாலைகளில் குறிப்பாக அண்ணாசாலை. எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை. ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்த மல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகையால் வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்ட மிடுமாறு போக்குவரத்துத்துறை அறி வுறுத்தியுள்ளது. பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் சில குறிப்பிட சாலை களில் தடை செய்யப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு போக்குவரத் துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்யகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை, இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு, மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை, அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு, விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை (கிண்டி), அண்ணா சிலைமுதல் மவுண்ட் ரோடு வரை, தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை ஆகிய பகுதிகளில் வணிக வாகனங்கள் தடைசெய்யப்படுகின்றன.