tamilnadu

சென்னை ,மதுராந்தகம் முக்கிய செய்திகள்

ரூ.15 லட்சம் மதிப்பில்  நகை - பணம் கொள்ளை

 மதுராந்தகம்,ஜூலை 4-  காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் குரு நாதன். இவர் அரிசி ஆலை மற்றும் லாரி உரிமையாளர். குருநாதன் குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றி ருந்தார்.  பின்னர் வியாழனன்று (ஜூலை 4) காலை திருப்பதியிலிருந்து, திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பிறகு உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 3 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி, ரூ. 7.5 லட்சம்  பணம் கொள்ளைய டிக்கப் பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 15 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து குருநாதன் மதுராந்தகம் காவல் துறை யில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

குறைதீர் கூட்டங்களை முன் அறிவிப்பு செய்து நடத்த வேண்டும் 

மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை

சென்னை, ஜூலை 3- ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு குறைதீர் கூட்டத்திற்கு, முன்அறிவிப்பு செய்து முறைப்படுத்த வேண்டும் என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சென்னை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவிவரம் வருமாறு:- ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் நடத்தப்படும் சிறப்புக் குறைதீர் கூட்டங்கள் குறித்து கோட்டத்திற்குட்பட்ட முக்கியமான மையங்களில் விளம்பரம் செய்வது மாற்றுத்திறனாளிகளுக்கு பேருதவியாக இருக்கும்.  மேலும், தாலுக்கா வாரியாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள் நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக 2 மாதங்களுக்கு  ஒருமுறை நடத்தப்படுகின்ற சிறப்புக் குறைதீர் கூட்டம் எப்போது நடக்கிறது என்பதே தெரிவதில்லை. எனவே தேதியை நிரந்தரமாக தீர்மானித்து கூட்டங்களை நடத்தினால் நன்றாக இருக்கும். கடந்த 25.6.2019 அன்று மாவட்ட அளவில்  தண்டையார்பேட்டையில் ஜமாபந்தி நடைபெற்றது. இது குறித்து எங்களைப் போன்ற அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. மேலும் ஜமாபந்தி நடத்தப்பட்ட மண்டபத்தில் படியேறி வர வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால், மாற்றுத்திறனாளிகள் பலர் படியேற முடியாமலும், தங்களது குறைகளை தெரிவிக்க முடியாமலும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர் எனவே, மாற்றுத்திறனாளி களும் எளிதில் பங்கேற்கும் வகையில் உரிய ஏற்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட  வேண்டும். 2 ஆண்டுகளுக்கு முன்பு சில மையங்க ளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பன்னோக்கு அடையாள அட்டை வழங்குவ தற்கான விண்ணப்பங்கள் மாற்றுத்திறனாளி களிடமிருந்து பெறப்பட்டன. ஆனால் இன்று வரையில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்க ளின் நிலை என்ன என்றே யாருக்கும் தெரிய வில்லை.  விண்ணப்பித்தவர்களுக்கு பன்னோக்கு அடையாள அட்டை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டத் தலைவர் இரா,ஜெயச்சந்தி ரன்,செயலாளர் கி,ராதை ஆகியோர் இந்த ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
 

;