tamilnadu

சென்னை ,செங்கல்பட்டு முக்கிய செய்திகள்

வருமான வரி கணக்கை நேரடியாக  இணையத்தில் தாக்கல் செய்க வருமானவரி கூடுதல் ஆணையர் வேண்டுகோள்

சென்னை, ஜூலை 14- இணைய வழியில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம்  வருமானவரித்துறை சார்பில் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.   மாதச்சம்பளம் பெறும் மத்திய மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி, காப்பீட்டு ஊழி யர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள்  2019-20க்கான வருமானவரி தாக்கல்  கணக்குகளை 31.7.2019 க்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். தாக்கல் பெற்ற சம்பளத்தில் டி.டி.எஸ் செய்யப்பட்டிருக்கும். மேலும் மின்தாக்கல் மூலமாக மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும். தவறினால் ரூ 1000 முதல் 10 ஆயிரம் வரை அபரா தம் செலுத்த வேண்டிவரும் அதனை தவிர்க்கவே இந்த கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி நிதி ஆலோசகர் ஐய்யனார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வரு மானவரித்துறை கூடுதல் ஆணையர் அமோல் பி.கிர்தனே பேசுகையில்,  130 கோடி மக்கள்  இந்தியாவில் 5.70 கோடி மக்கள் மட்டுமே வருமானவரி செலுத்து கின்ற னர். இந்த ஆண்டு வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்வோர் எண்ணி க்கையை மேலும் 1.30 கோடி வரை அதிகரிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. தமிழ கத்தில் குறைந்த பட்சம்  10 லட்சம் புதிய வருமானவரிக் கணக்குகளை தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. ரூ 5 லட்சத்துக்கு மேல் வரு வாய் இருந்து, வரிவிலக்கு போக ரூ 2.50லட்சத்துக்கும் குறைவாக வருமானம் காட்டினாலும், கட்டாயம் வரு மானவரிக் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.  10 ஆண்டுகளுக்கு முன்பு தாள் வடிவில் வருமான வரிக்கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது 100 விழுக்காடு இணைய வழியில் தாக்கல் செய்யும் வசதி வந்துவிட்டது. தாக்கல் செய்யும் முறை எளிதாக்க ப்பட்டுள்ளது. எனவே அனைவரும் கட்டாயம் வருமான வரிக்கணக்கு களை தாக்கல் செய்வது டன், அதை இணையதளம் வழியாகவே செய்ய வேண்டும்.  அதை விடுத்து மூன்றா வது நபர்கள் மூலமாக தாக்கல் செய்தால், அவர்க ளது  தவறான அறிவுறுத்த லின் பேரில், வரி விலக்குக்காக பொய்யான தகவல்களை பலர் அளிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே வருமான வரிக் கணக்குகளை மூன்றாவது நபர் மூலமாக தாக்கல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் வருமானவரித் துறை துணை ஆணையர் என்.அபிநயா, துறை அதிகாரிகள் குண சேகரன், பாஸ்கரன், கிருஷ்ணமூர்த்தி, சுந்தர மூர்த்தி, சிவானந்தம், வித்யாரங்க துரை, , தினேஷ் விக்ரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு அரசு  மருத்துவமனையில்  பிரசவிக்கும்  தாய்மார்களிடம் கட்டாயம் ரூ.1000 வசூல்

செங்கல்பட்டு, ஜூலை 14 செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களை அறுவை சிகிச்சை அரங்கத்திலிருந்து வார்டுக்கு எடுத்துச் செல்லும்போது வண்டியை தள்ளுவதற்கு கட்டாயமாக ரூபாய் 1000 தர வேண்டும்  என மிரட்டும்  ஊழியர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டுமென  இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது.  சார்பில் மாவட்டத் தலைவர் நந்தன்  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  முதல்வரை சந்தித்து மனு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த மனுவில் உள்ள விவரம் வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒன்றாம் தேதி எனது தங்கைக்கு அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை அரங்கத்திலிருந்து வார்டுக்கு எனது தங்கையை தள்ளுவண்டியில் வைத்து எடுத்துச் செல்ல இளம் சிவப்பு நிறத்தில் சீருடை அணிந்திருந்த ஆண் ஊழியர் 1000 ரூபாய் தந்தால்தான் வண்டியை வார்டுக்கு  தள்ளுவேன் என்று மிரட்டினார். எவ்வளவு சொல்லியும் கேட்காமல்  600 ரூபாய் பெற்றுக் கொண்டு பின்னரே  வண்டியை தள்ளிச் சென்றார். இது மட்டுமின்றி பிரசவ வார்டில் பணியில் உள்ள ஊழியர்கள் எந்த வேலை என்றாலும்  50 ரூபாய் முதல் 200  ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக் கொண்ட பின்னரே பணிகளை மேற்கொள்கின்றனர் கிராமப்புறங்களில் இருந்து பிரசவத்திற்காக மருத்துவமனை வரும் ஏழை எளிய மக்களிடம் இதுபோன்று கட்டாயப்படுத்தி லஞ்சம்  பெறு வது கண்டனத்துக்குரியதாகும் உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.