tamilnadu

சென்னை , செங்கல்பட்டு முக்கிய செய்திகள்

தமிழில் சமையல் செய்முறை எழுத, பகிர இணையதளம்

சென்னை, நவ.20- உலகின் மிகப்பெரிய சமையல் செய்முறையை  பகிரும் இணையதளமான குக்பேட் தற்போது அதன் இந்திய பயனாளர்களுக்காக தமிழில் தொடங்கப்பட்டு இருக்கிறது உலகமெங்கும் 68 லட்சம் தனித்துவமான ரெசிபிக்கள், 1 கோடி மக்கள் மாதந்தோறும் பயன்படுத்தும் ஜப்பான் ஆன்லைன் ரெசிபிக்கள் பகிரும் இணைய தளமான குக்பேட் கடந்த 2016 ஆண்டு இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்தது. இப்போது அது தமிழ் இணையத்தளத்தை (https://cookpad.com/in-ta) தொடங்கியுள்ளது. இது தற்போது தமிழ், இந்தி , குஜராத்தி, பெங்காலி, மராத்தி,ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் உள்ளது.  தமிழ்  குக்பேடின் நோக்கமானது சமையல் கலையை  ஊக்கப்படுத்துவது ஆகும். 1997 லிருந்து வீட்டில் இருக்கும் சமையல் கலை ஞர்களை வேடிக்கையாக சமைக்க வைத்து ஒருவரோடு ஒருவர் அறிமுகப்படுத்தி வருகிறது இந்த  குக்பேட் இணையத்தளம்.  தற்போது 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த இணையதளம் செயல்பட்டு வருகிறது. 

திட்ட மேலாண்மை மாநாடு

சென்னை,நவ20 திட்ட மேலாண்மை நிலையத்தின் (  பி.எம்.ஐ) சென்னை பிரிவு, தனது மிகப்பெரும் திட்ட மேலாண்மை மாநாட்டை சென்னையில் நடத்தியது. “துரித நடைமுறைகள் மற்றும்  புதுமை கண்டுபிடிப்பு: திட்ட வெற்றிக்கான முக்கியக்கூறுகள்’ என்பதே இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் ஆகும்.  பிஎம்ஐ-ன் சான்றிதழ் பெற்ற  உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட னர். வெற்றிகரமான திட்ட செயலாக்கம் மற்றும் துரிதமான நடைமுறைகள் மூலம் நிலையான வணிக முடிவுகளை திறமையுடன் வெளிப்படுத்துதல் தொடர்பாக பல்வேறு துறை களைச் சார்ந்த தொழில்துறையினர் கூடி விவாதித்தனர்.  ஒரு நாள் மாநாட்டில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள்  பங்கேற்றனர் என்று   பி.எம்.ஐ சென்னை பிரிவின் தலைவர் சையத் நசீர் ரசிக் கூறினார். 

கஞ்சா விற்ற நைஜீரிய  மாணவர்கள்  கைது  

செங்கல்பட்டு,நவ.20- செங்கல்பட்டு மாவட்டம், காட்டங்கொளத்தூரில் செயல்பட்டுவரும் எஸ்ஆர்எம் கல்லூரி அருகே போதைப் பொருள் விற்பதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து  காவல்துறையினர் எஸ்.ஆர்.எம்  கல்லூரி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, நைஜீரிய நாட்டை சேர்ந்த இரண்டு வாலிபர்கள்  கல்லூரி மாணவர்களிடம் கஞ்சாவை விற்பனை செய்தபோது காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். பின்னர், ஊரப்பாக்கத்தில் தங்கியிருக்கும வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது 7 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் ஆகும். பின்னர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சார்பில் சமீப காலமாக  6 கல்லூரி மாணவர்களை  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

குடும்ப அட்டை  வகை மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம், நவ.20- குடும் அட்டை வகை மாற்றம் செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கலம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பு வருமாறு:- உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முலம் வழங்கப்பட்டு தற்பொது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் NPHH-S சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்போர்கள் தகுதியின் அடிப்படையில் தங்களது குடும்ப அட்டையை NPHH அரிசி அட்டையாக வகை மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டை யின் நகலை இணைத்து இம்மாதம் 26 ஆம் தேதிக்குள் www.tnpds.gov.in  என்ற இணைய தள முகவரியிலும்,  சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் அலுவலகத்தி லும் அளிக்கலாம். விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டையாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  சர்க்கரை விருப்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

காலவதியான அஞ்சல் காப்பீடுகளை புதுப்பிக்க வாய்ப்பு

செங்கல்பட்டு, நவ.20- ஐந்தாண்டுகளுக்கு மேல் காலாவதியான அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடுகளை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பாலிசிதாரர்கள் புதுபித்துக் கொள்ளலாம் . அதற்கு மேல் புதுபிக்க இயலாது. புதுப்பிப்பதற்கான குறித்த விவரம் தேவைப்படுவோர் கிளை , துணை தபால் நிலையம் உள்ளிட்ட அனைத்து தபால் நிலைய அலுவ லர்களை அணுகலாம் என செங்கல்பட்டு அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் கே.விஜயா தெரிவித்துள்ளார்.

;