சென்னை, ஜூன் 20- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின்கட்ட ணம் செலுத்த ஜூலை 15 வரை கால அவகா சம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்வாரியம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: மார்ச் 25 முதல் ஜூலை 14 வரை மின்கட்ட ணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வ ழுத்த மின்நுகர்வோர் ஜூலை 15ம் தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறுமின்இணைப்பு கட்டணமின்றி செலுத்த லாம். அதுவரை மின்இணைப்பு துண்டிக்கப் படமாட்டாது. ஜூன் 16-30 வரை மின் கணக்கீட்டு தேதி உள்ளவர்கள் முந்தைய மாத கட்டணத்தை செலுத்தினால் போதுமானது. அதேசமயம் இணையதளம் மூலம் கட்டணம் செலுத்த விரும்புவோர் கட்டணத்தை செலுத்தலாம். அதேபோன்று உயர்மின்னழுத்த நுகர்வோருக்கும் ஜூலை 15வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பி னும் ஆர்டிஜிஎஸ் இணையதள வழி முறையை பின்பற்றி கட்டணத்தை செலுத்த லாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.