சென்னை,பிப்.16 விஐடியில் ஒவ்வொரு ஆண்டும் ரிவேரா என்னும் சர்வதேச கலை, கலாச்சாரம் மற்றும் விளையாட்டுத் திரு விழா நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 12ஆம் தேதி தொடங்கிய ரிவேரா'20- சனிக்கிழமை (பிப்.15) நிறைவடைந் தது. விஐடி வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கலந்து கொண்டு ரிவேரா'20 விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற எஸ் எஸ் என் கல்லூரி மற்றும் கலைப் போட்டி யில் வெற்றி பெற்ற கிரிஸ்ட் பல்கலைக் கழகத்திற்கு கோப்பையை வழங்கி பேசியதாவது. வாழ்வில் நாம் எண்ணிய லட்சியத்தை அடைய நாம் தொடர்ந்து கடின முயற்சியில் ஈடுபடவேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் நாம் முயற்சியை கைவிடக் கூடாது. அதே போல் இருசக்கர வாகன ஓட்டுனரும் பின்னால் உட்கார்ந்து வருபவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். மேலும் நாம் வாகனத்தை மது அருந்திவிட்டு ஓட்டக் கூடாது என்றார். நிறைவு விழாவில் விஐடி பல்கலை கழக வேந்தர் கோ.விசுவநாதன், உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவ நாதன், துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், இணை துணை வேந்தர் டாக்டர்.எஸ். நாராயணன், ரிவேரா ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி உள்பட பலர் கலந்துகொண்டனர். ரிவேராவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும், 39 அயல்நாட்டு மாணவர்களையும் சேர்த்து மொத்தம் 44,000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.