tamilnadu

img

திருவள்ளூர் மாவட்டம் மனித சங்கிலி இயக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருவள்ளூர், ஜன.30-  மத்திய பாஜக அரசு மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் பதிவேடு (என்பிஆர்), தேசிய மக்கள் தொகை பதி வேடு (என்ஆர்சி) ஆகிய மும்முனை தாக்குதலைக் கொண்டு  வருவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக மக்கள் மேடை என்ற அமைப்பின் சார்பில் வியாழ னன்று (ஜன.30) அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடை பெற்றது. பொன்னேரியில் நடை பெற்ற மனித சங்கிலி இயக்கத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் தலைமை தாங்கினார். பழவேற்காடு பகுதியில் நடைபெற்ற இயக்கத்திற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டியில் விவ சாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட துணைத் தலை வர் இ.ராஜேந்திரன், மீஞ்சூ ரில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ஆர். காளமேகம், பெரியபாளை யம் பஜாரில் நடைபெற்ற இயக்கத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஜி.கண்ணன் தலைமை தாங்கினார்.  இந்த இயக்கத்தில் சிபிஎம், சிபிஐ, திமுக, காங்கி ரஸ், விடுதலை சிறுத்தை கள் கட்சி, தி.க, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் சிறுபான்மை அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் உட்பட பல முற்போக்கு அமைப்பு கள் கலந்து கொண்டன.

;