tamilnadu

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் முக்கிய செய்திகள்

வாக்கு எண்ணும் பணிகள் தாமதம் ஆட்சியர் கந்தசாமி ஆய்வு

திருவண்ணாமலை, ஜன.2- திருவண்ணாமலை சண்முகா தொழிற் சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் துரிஞ்சா புரம் ஊராட்சி ஒன்றியம்  தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 218 அலுவ லர்கள் வாக்கு எண்ணும் பணிக்கு வராத தால் வாக்கு எண்ணும் பணி தாமதமானது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட் டத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்று பதி வான வாக்குகள் அனைத்தும் திருவண்ணா மலை டேனிஷ் மிஷின் பள்ளியில் வைக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணி தொடங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார்.  செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கந்தசாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் பதிவான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் மையத்துக்கு கொண்டு வந்து  வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு வருகிறது. இதில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: ஊராட்சி முன்னாள் எழுத்தருக்கு சிறை

திருநெல்வேலி, ஜன.2- குடிநீர் இணைப்பு வழங் கியதில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பான வழக்கில், ஊராட்சி முன்னாள் எழுத்த ருக்கு 3 ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதித்து நெல்லை  ஊழல் தடுப்பு சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்தது. நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள சிதம்பராபுரம் ஊராட்சியில் கடந்த 2001 முதல் 2006 வரை ஊராட்சித் தலைவராக சூர்ய நாராயணனும், எழுத்தராக ராஜகண்ணனும் (48) பொறுப்பு வகித்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள 132 வீடுகளுக்கு குடி நீர் இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டது. ஆனால், நிர்ண யிக்கப்பட்ட வீடுகளுக்கும் கூடுதலாக குடிநீர் இணைப்பு கள் வழங்கியதோடு, இணைப்  புக்கான தொகையை கூடுத லாக வசூலித்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் ஊழல்  தடுப்பு மற்றும் கண்காணிப் புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து கடந்த 2008 ஆம் ஆண்டு இருவரையும் கைது செய்தனர்.  இதுதொடர்பான வழக்கு  நெல்லையில் உள்ள ஊழல்  தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. வழக்கு நிலுவையில் இருந்தபோது சூர்யநாராயணன் விபத்தில் பலியானார்.  இதனால் ராஜகண்ணன் மீதான புகார் மீது வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, குற்றம்சாட்டப்பட்ட ராஜகண்ணனுக்கு 3 ஆண்டு கள் சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து  தீா்ப்பளித்தார்.

மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி

ஆம்பூர், ஜன. 2- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியில் விவசாய நிலத்தில் பயிர் பாதுகாப்புக்காக சுற்றிலும்  மின் வேலி அமைத்து, வனவிலங்குகளை உள்ளே வராமல்  தடுப்பதற்காக வைக்கப்பட்டி ருந்த மின்சார வேலியில் சிக்கி  சபாபதி (50) என்பவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சபாபதியின் உறவினர்கள் பிரபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் பிரபாத் காவலர்கள் நிலத்தின் உரிமையாளர்களான கோபாலகிருஷ்ணன் (45), வெங்கடேசன் (40) ஆகிய இருவரை கைது செய்து  விசாரித்து வருகின்றனர்.

குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்

 விருதுநகர், ஜன.2- தனியார் மருத்துவமனையில் வெறும் 720  கிராம் எடையில் பிறந்த குழந்தையை தாயின் துணையின்றி விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் 830 கிராமாக உயர்த்தி சாதனை படைத்தனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ளது எட்டக்காபட்டி. இப்பகுதி யைச் சேர்ந்தவர் பாலமுருகன்(24). இவரது  மனைவி  காயத்ரி (23). இவர்களுக்கு கடந்த  2019 நவ.,18 அன்று தனியார் மருத்துவமனை யில் பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை  வெறும் 29 வாரத்திலேயே பிறந்தது. இதனால்,  வெறும் 720 கிராம் மட்டுமே இருந்தது. இது சரா சரி எடையை விட மிகவும் குறைவாகும். இந்த தகவல் விருதுநகர் அரசு தலைமை  மருத்துவமனைக்கு கிடைத்தது. இதை யடுத்து, இதை சவாலாக எடுத்துக் கொண்டு  அரசு மருத்துவர்கள், எடை குறைவாக  பிறந்த அக்குழந்தையை விருதுநகர் அரசு  தலைமை மருத்துவமனையில் உள்ள பிர சவ பிரிவில் அனுமதிக்க கேட்டுக் கொண்ட னர். இந்நிலையில், குழந்தையின் தாய்  காயத்ரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  எனவே, அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றார்.  குழந்தை விருதுநகர் தலைமை மருத்துவ மனையில் உள்ள இன்குபேட்டரில் வைத்து  பாதுகாக்கப்பட்டது. மேலும், அங்குள்ள தாய்ப்பால் வங்கி மூலம் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கப்பட்டது. இதில் சிறிது,  சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டது. இந்தநிலை யில், 43 வது நாளன்று குழந்தையின் எடையை அளக்க மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர். அதில் குழந்தையின் எடையானது 830 கிராமாக உயர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பெற்றோர்கள் மற்றும் மருத்து வமனை ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இதுகுறித்து குழந்தைகள் நல மருத்து வர் ஜவஹர் கூறியதாவது : வெறும் 720 கிராம்  எடையில் பிறந்த பெண் குழந்தை 43 நாட்க ளில் 830 கிராமாக எடை அதிகரித்துள்ளது. இதில் தாய்ப்பால் வங்கியின் பங்கு முக்கிய மானதாக கருதப்படுகிறது. மேலும், மருத்துவ மனையில் சிறந்த முறையில் பராமரித்த  மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்து வர்களின் சேவை மிகவும் சிறப்பு மிக்கதாகும் என தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன

விழுப்புரம்.ஜன.2- விழுப்புரத்தில் தேசிய குழந்தை பாது காப்பு ஆணைய உறுப்பினர் ஜி.ஆனந்த்  தலைமையில், குழந்தைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்நாடு முழு வதும்  கடந்த ஓராண்டில்  பெண்களுக்கு  எதிரான குற்றங்கள்  நிறையவே குறைந்துள் ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் அச்சப்படும் அளவுக்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்  டும். இதுதொடர்பாக கடந்த மூன்று மாதங்க ளில் 14 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. அதில் 4 ஆயிரத்து 500 புகார்களுக்கு தீர்வு  காணப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தை கள் பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழகம்  சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார், கூட்டத்தில் விழிப்புணர்வு கலெண்டர் வழங்கி னார்.

;