tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

மதுரவாயலில்  டி.ஆர்.பாலு  பிரச்சாரம் 

திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு செவ்வாயன்று (ஏப்.16) மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 91, 92, 143, 145 வட்டங்களில் வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தில் காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ, சிபிஎம் மதுரவாயல் பகுதிச்செயலாளர் வி.தாமஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். வேட்பாளருக்கு 145வது வட்டத்தில் பகுதிக்குழு உறுப்பினர் மாவை.கிருஷ்ணமூர்த்தி, கிளைச் செயலாளர்கள் தாமோதரன், மோகனகிருஷ்ணன், ரமேஷ் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

நொச்சிக்குப்பத்தின்  தமிழச்சி தங்கபாண்டியன்  பிரச்சாரம்

தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் திங்களன்று (ஏப்.15) மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நொச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். திமுக தென் மேற்கு மாவட்டச் செயலாளர் தா.வேலு எம்எல்ஏ, பகுதி செயலாளர் முரளி, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி, உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

சேப்பாக்கம் பகுதியில் தயாநிதி மாறன்  பிரச்சாரம்

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் திங்களன்று (ஏப்.15) சேப்பாக்கம் பகுதி, அண்ணாநகர், ஆயிரம் விளக்கு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு சிறுபான்மைமக்கள் அன்பான வரவேற்பு அளித்தனர்.