tamilnadu

கருத்து கணிப்பும் - களநிலவரமும்

சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் என்றஅமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரிமாநிலத்திற்குட்பட்ட 40 தொகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அந்த கருத்து கணிப்பின் முடிவுகள் கடந்த வெள்ளியன்று வெளியிட்டது. இதில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் கருத்துக் கணிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கேள்விகள் குறித்து பண்பாட்டு மக்கள் தொடர்பகம் பொறுப்பாளரை தொடர்பு கொண்டு பேசினோம்.அதற்கு அவர்கூறிய பதில், ஒவ்வொரு தொகுதியின் பிரத்யேக நிலை குறித்து கருத்துக்கணிப்பில் கேள்விகள் முன்வைக்கப்படவில்லை. மாறாக, மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்விகள்தான் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், தமிழகத்தின் மற்றதொகுதிகளை விட பாஜக ஆட்சியில்கோவை கடுமையாக பல்வேறு வகையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நகரமாகும். குறிப்பாக கோவை தொகுதி என்றால் சிறு, குறு தொழில்கள் அதிகமாக உள்ள தொகுதி. இங்கு மோடி அரசின் முன் திட்டமிடாத ஜிஎஸ்டி அறிவிப்பினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழில்கள் ஜிஎஸ்டியால் மூடப்பட்டிருக்கிறது. சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்திருக்கின்றனர் என சட்டமன்றத்திலேயே அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாறு கோவை மாவட்டம் முழுவதும் தொழில்கள் அடியோடு பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் எந்தகாலத்திலும் இல்லாத அளவில்கோவை தொகுதி மக்கள், பாஜகஆட்சி மீது கடுமையான வெறுப்பில்இருக்கின்றனர். இதேபோல், கோவை தொகுதி 60 சதவிகிதம் நகர்புறத்தை சார்ந்து இருப்பதால், உயர்பணமதிப்பு நீங்க நடவடிக்கையிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி கோவை. இந்ததொகுதியில் தற்போது பாஜகவே எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி நேரடியாக களம் காண்கிறது. தொகுதி முழுவதும்பாஜக மற்றும் மோடி எதிர்ப்பலை கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் கோவை தொகுதி பாஜகவிற்கு சாதகமாக அமையும் என்பது எதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வுஎன்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இந்த கருத்து கணிப்பு அறிவியல் பூர்வமாகவோ, ஆதாரபூர்வமாகவோ இருப்பதாக தெரியவில்லை. இது முழுமையாக ஏற்கதக்க கருத்து கணிப்பு அல்ல என கோவையிலுள்ள பலதரப்பினரும் தெரிவிக்கின்றனர். முன்னதாக, லயோலா கல்லூரி மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் சார்பாக நடத்தப்பட்டிருக்கும் கருத்துக்கணிப்பில் பாஜகவின் ஐந்தாண்டு கால ஆட்சியின் செயல்பாடு பற்றிய கேள்விக்கு 87 சதவிகிதம் பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். இதிலும், பாஜக ஆட்சிக்கு90 சதவிகிதம் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். 55 சதவிகிதம் பேர் மோடி பிரதமர் ஆக வாய்ப்பே இல்லை என்று கூறியிருக்கின்றனர். இந்த தரவுகளின் அடிப்படையில் பார்த்தாலும் கோவையில் பாஜக வெற்றி பெற எந்த வாய்ப்பும் இல்லை என்பதுபுரியும்.


இதுதான் களநிலவரம்.- வி.இராமமூர்த்தி, சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர்.

;