tamilnadu

img

இப்போதைக்கு தேர்தல் இல்லை

தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்துவதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ”எல்லைகள் வரையறை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குச்சாவடிகள் அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவு பெறாததால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்த முடியவில்லை. எனவே தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க உள்ளதாக தெரிவித்தார்.

இந்த மசோதாவின் மீது நடந்த விவாதத்தின் போது கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசிய திமுக உறுப்பினர் மா. சுப்பிரமணியன்,”கடந்த 4 ஆண்டுகாலமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை தேர்வு செய்யாமல் இருப்பது அதனால் ஒவ்வொரு முறையும் தனி அலுவலர் பதவி காலத்தை நீட்டித்துக் கொண்டே வருவது சரியான நடைமுறை அல்ல என்றும் இந்தப் பேரிடர் காலத்திலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இல்லாமல் இருப் பது வருத்தம் அளிக்கிறது என்றும் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்காக அரசு தெரிவித்திருக்கும் காரணங்கள் மலிவானது. நகைப்புக்குரியதாக இருக்கிறது என்றார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊராட்சி அமைப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பது ஒன்றியங்களை அதிகாரம் இல்லாத அமைப்பாக மாற்றி விட்டது என்பதால் அரசின் சட்டத் திருத்தத்திற்கு திமுக உறுப்பினர் கு.பிச்சாண்டி கடும் கண்டனம் தெரிவித்தார்.இதற்கு பதில் அளித்து தேசிய அமைச்சர் வேலுமணி,”வைரஸ் தொற்றால் பிற மாநிலங்களில் உள்ளாட்சி 
அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற வில்லை சுட்டிக் காட்டியதோடு இயல்பு நிலை திரும்பும் வரைக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த சாத்தியமில்லை” என்றார்.

;