tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

சென்னை சாலை பணிகள் போக்குவரத்து நெரிசல்

சென்னை,அக்.27- சென்னையில் பல்வேறு இடங்களில் நடக்கும் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் காரண மாக மக்கள் கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள் கின்றனர். அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.60.68  கோடியில் 652 மீ நீள ‘L’ வடிவ மேம்பாலம் அமைக்கப் படுகிறது. 19 தூண்களில் 17 முடிந்துள்ளன. டிசம்பரில் பணி  முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதவரம்-நல்லூர் சுங்கச்சாவடி 10.3 கி.மீ பகுதியில் நாளொன்றுக்கு 80,000-95,000 வாகனங்கள் செல்கின்றன. நிலம் கையகப்படுத்தல் பிரச்ச னையால் இது 10 ஆண்டுகளாக நான்கு வழிச்சாலை யாகவே உள்ளது. பாடி-திருநின்றவூர் 22 கி.மீ சாலை விரிவாக்கம் 2012-ல் வணிகர் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. ரூ.1,893 கோடி மதிப்பிலான மாதவரம்-நல்லூர் மேம்பாலத் திட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது துறைமுகம்- மதுரவாயல் ரூ.5,570 கோடி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. பணிகள் நடப்பதால் பேரிகேட்டுகள் போடப்பட்டு சாலை கள்

குறுகி கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும்  சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி

சென்னை, அக்.27- தமிழக அரசின் ஆதரவுடன் 2-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி திங்களன்று தொடங்கியது.  நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நவம்பர் 2 வரை நடைபெறும் இந்த போட்டியில் உலக தரவரிசையில் 69-வது இடம் வகிக்கும் துருக்கியின் ஜய்னப் சோன்மெஸ், 74-ம் நிலை வீராங்கனை இங்கிலாந்தின் பிரான்செஸ்கா ஜோன்ஸ், ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்ற குரோஷியாவின் டோனா வெகிச், நடப்பு சாம்பியன் செக்குடியரசின் லின்டா புருவிர்தோவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.  இந்திய இளம் வீராங்கனைகள் மாயா ரேவதி, ஸ்ரீவள்ளி பாமிதிபதி, சஹஜா யாமலபள்ளி ஆகியோருக்கு வைல்டு கார்டு சலுகை வழங்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுக்குப் பிறகு நடக்கும் இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.2.41 கோடி. ஒற்றையர் சாம்பியனுக்கு ரூ.32 லட்சம் பரிசுத்தொகையுடன் 250 தரவரிசை புள்ளிகளும், இரட்டையர் வெற்றி பெறும் ஜோடிக்கு ரூ.11.50 லட்சமும் வழங்கப்படும்.

தங்கம்விலை சற்று குறைந்தது

சென்னை,அக்.27- சென்னையில் ஆபரணத் தங்கம் விலை  கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,450-க்கும் சவரனுக்கு  ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.91,600-க்கும் விற்பனை யாகிறது. வெள்ளி விலையில் திங்களன்று  எந்த மாற்றமும் இல்லை.