tamilnadu

தீக்கதிர் செய்தித் துளிகள்

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

♦♦♦

பொது முடக்கம் காரணமாக பாகிஸ்தானில் சிக்கித் தவித்த 250 இந்தியர்கள் அடங்கிய குழு வாகா எல்லை வழியாக இந்தியா வந்து சேர்ந்தனர்.

♦♦♦

தொழில்முறை படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரா முதல்வர்  உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.

♦♦♦

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மாநில அரசுகள் கேட்டால் 24 மணிநேரத் தில் சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்கத் தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

♦♦♦

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான நேரடி தரிசன டோக்கன்களின் எண்ணிக்கை 3 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

♦♦♦

தமிழகத்தில் மேல் நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 1463 கணினி பயிற்றுநர் பணியிடங்களை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

♦♦♦

பீகாரின் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் மின்னல் தாக்கி மேலும் 13 பேர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

♦♦♦

நீட் தேர்வை ஒத்திவைப் பது குறித்து தேசிய தேர்வுமுகமை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

♦♦♦

சென்னையில் ஜூன் 27 சனிக்கிழமையன்று பெட்ரோல் லிட்டருக்கு 83.59 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.61 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.